பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவு

கரூர், ஜூலை 17 பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார். 

 பள்ளி பேருந்துகள் ஆய்வு கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று (16.7.2022) தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்கள் தரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-  2012-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்கள் சாலையில் செல்ல தகுதியாக உள்ளதா, சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதையும், நோய் தொற்றுகள் எவ்விதத்திலும் பரவாமல் உள்ளதா எனவும் பார்வையிடப்பட்டுள்ளது. இதில் 82 பள்ளிகளின் 451 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகுதியில்லாத வாகனங்கள் கரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு சுகாதாரமாக உள்ளதா என்பதையும், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, முதலுதவிப் பெட்டி போன்றவைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பஸ்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஆய்வின்போது சரியாக இல்லாத பேருந்துகளை உடனடியாக விதிகளின்படி சரிசெய்வதற்கும், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாததாக கருதப்படும் வாகனங்களை ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீ தடுப்பு ஒத்திகைமேலும் வாகனம் ஓட்டும்போது மது போதையில் இருக்கக்கூடாது என கூறினார்.

No comments:

Post a Comment