ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை

*    அனைத்து மதத்தினருக்கும் திராவிட மாடல் அரசாக விளங்கும் தமிழ் நாடு அரசு உள்ளது. ஒரு மத பூஜையை அனுமதிக்காதீர்கள் என தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் அதிகாரிகளுக்கு அறிவுரை.

* நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவது ஜன நாயகத்திற்கு நல்லது அல்ல, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.வி.ரமணா கருத்து.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மே 28 அன்று சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஜூன் இதழ் அவருக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாகவும், வரலாற்றில் அவரது இடம் காந்திக்கு குறையாது என்றும் ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமர் மோடி பூஜை போட்டு திறந்து வைத்த புதிய அசோகர் சின்னத்தின் வேறுபாடுகளை கணினி மூலமாக சரி பார்க்க வேண்டும் என திர்ணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜவகர் சர்கார் பேச்சு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் அக்னிபாத் குறுகிய கால பாதுகாப்பு ஆள்சேர்ப்பு திட்டம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன..

 - குடந்தை கருணா


No comments:

Post a Comment