கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கல்லக்குறிச்சி, ஜூலை 8- ஜூலை 2 சனிக்கிழமை மாலை 6 மணிய ளவில் கல்லக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலுவலகத் தில் கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட இளைஞரணி, மாவட்ட திரா விட மாணவர் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் கூட் டம் எழுச்சியுடன் நடைபெற் றது.

கூட்டத்திற்கு விழுப்புரம் மண்டல கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ் கர் தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் ம.சுப்பராயன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் ச.சுந் தரராசன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் புலவர் 

பெ.சயராமன், பொதுக்குழு உறுப்பினர் த.பெரியசாமி, மாவட்ட மகளிரணித் தலைவர் பழனி யம்மாள் கூத்தன் ஆகி யோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

கலந்துரையாடல் கூட்டத் தின் முக்கிய பொருளான, விடு தலை நாளேட்டின் ஆசிரியப் பணியில் மணிவிழா காணும் தமிழர் தலைவருக்கு இம் மாவட்டம் சார்பாக ஆயிரம் சந்தாக்கள் வழங்குதல், 30.7.2022இல் நடைபெறவுள்ள அரியலூர் மாநில இளைஞ ரணி மாநாட்டில் திரளாக இம்மாவட்டம் சார்பாக கலந்து கொள்ளுதல் பற்றி மாநில மருத்துவரணி செயலா ளர் மருத்துவர் கோ.சா.குமார், கல்லக்குறிச்சி மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீ.முருகே சன், திருக்கோவிலூர் ஒன்றிய கழகத் தலைவர் தேவரடியார் குப்பம் மு.இளங்கோவன் ஆகி யோர் கருத்துரை ஆற்றினார் கள்.

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலா ளர் த.சீ.இளந்திரையன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், "கல்லக் குறிச்சி திராவிடர் கழக மேனாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி கோ.சாமிதுரை அவர்களின் மாவட்டமாகும். அவரின் வாரிசுகள் கோ.சா. குமார் மாநில மருத்துவரணி செயலாளராகவும், கோ.சா. பாஸ்கர், விழுப்புரம் மண்டல கழகத் தலைவராகவும் விளங்கி கழகப் பணியாற்றி வருகிறார் கள். இவர்களின் வழிகாட்டு தலில் கல்லக்குறிச்சி மாவட்ட அனைத்து நிலைப் பொறுப் பாளர்களும் கழகப் பணிகள் சிறப்பாகவும் பேர் சொல்லும் படியாகவும் செய்து வருகிறார் கள்" என்று கூறினார்.

மேலும் அரியலூரில் வரும் 30.7.2022இல் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி மாநாட் டிற்கு இம்மாவட்டம் சார்பாக நன்கொடை வழங்குவதிலும், இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதிலும், சிறந்து விளங் கும் என்றும், விடுதலை நாளேட் டின் ஆசிரியப் பணியில் மணி விழா காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இம் மாவட்டம் சார்பாக ஒதுக்கப் பட்டுள்ள ஆயிரம் சந்தாக் களையும் வழங்கும் என்றும் தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.

முன்னதாக தேசிய அளவில் Dynamic Health Care Award- Pediatrics என்ற விருதினைப் பெற்ற மாநில திராவிடர் கழக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் அவர்களுக்கு கலந்துரையாட லில் கலந்து கொண்ட பலரும் பயனாடை அணிவித்து பாராட்டி, மேலும் பல விருதுகள் பெற வாழ்த்தினார்கள்.

இக்கலந்துரையாடல் கூட் டத்தில் கல்லக்குறிச்சி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் சி.முருகன், ஆசிரியர் கலிய இராசவேலன், மண லூர்பேட்டை நகர கழகச் செய லாளர் பா.சக்தி, கல்லக்குறிச்சி நகர கழக செயலாளர் நா.பெரியார், மூரார்பாளையம் கிளைக் கழகத் தலைவர் இரா.செல்வமணி, மா.ஆராவமுதன், விருத்தாசலம் பிரகாஷ் உள் பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இறுதியில் கல்லக்குறிச்சி நகர கழகத் தலைவர் இரா.முத் துசாமி நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட 

தீர்மானங்கள்

1. நூறாவது பிறந்த நாள் கண்ட பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத் தலை வர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் இன்னும் பல ஆண் டுகள் நலமுடனும், வளமுட னும் வாழ, கல்லக்குறிச்சி மாவட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

2. இம்மாவட்டம் சார்பாக விடுதலை நாளிதழின் ஆசிரியர் பணியில் மணிவிழா காணும் தமிழர் தலைவர் அவர்களுக்கு ஓராயிரம் சந்தாக்களை சேக ரித்து வழங்குவது என தீர்மா னம் நிறைவேற்றப்படுகிறது.

3. அரியலூரில் சூலை 30இல் நடைபெறவுள்ள இளைஞரணி மாநாட்டில் நூறு இளைஞர் களுக்கு குறைவில்லாமல் பங் கேற்பது எனவும், பேரணியில் சிறப்பாக பங்கேற்கும் மாவட் டத்துக்கு தமிழர் தலைவர் முதல் பரிசாக அளிக்கவுள்ள ரூ.25000 கல்லக்குறிச்சி மாவட் டம் பெறுவதற்கு ஏற்ற வகை யில் செயல்பட வேண்டுமென் றும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

No comments:

Post a Comment