வெ.ஜெயராமன் பிறந்தநாள்-தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

வெ.ஜெயராமன் பிறந்தநாள்-தமிழர் தலைவர் வாழ்த்து

தஞ்சை மண்டல கழகக் காப்பாளர் வெ.ஜெயராமனுக்கு 13.7.2022 அன்று 82ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை யொட்டி, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, திரு வையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் ப.சுதாகர், தஞ்சை மாநகரச் செயலாளர் அ.டேவிட், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, திருவையாறு நகர செயலாளர் கவுதமன், ரவி, வாசுகி, கமலக்கண்ணிகண்ணன் ஆகியோர் இன்று காலை மாத்தூர் இல்லம் சென்று வெ,ஜெயராமன்-தேவகி இணையருக்கு பயனாடை, மாலை அணி வித்து புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தனர். அவரும் 10 விடுதலை சந்தாவுக்கான ரசீது புத்தகங்களை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஜெயராமன்-தேவகி வாழ் விணையர்களிடம் தொலைபேசியில் பேசி வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.


No comments:

Post a Comment