மின்உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கும் திட்டமென்ன? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

மின்உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கும் திட்டமென்ன? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி!

புதுடில்லி, ஜூலை 26- நிலக்கரி இறக்குமதி குறைவால் ஏற்பட் டுள்ள தாக்கம் என்ன? நாட்டில் உள்ள மின்சார உற்பத்தி நிலையங் களுக்கு தொடர்ந்து நிலக்கரி வழங்க அரசிடம் திட்டம் உள் ளதா? என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா 18.7.2022 அன்று எழுப்பிய கேள்வி வருமாறு:

நிலக்கரித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட கேள்விக்கு பதில் அளிப்பாரா?

(அ) நிலக்கரி இறக்குமதியைக் குறைத்ததன் மூலம் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அரசு மதிப்பீடு செய்துள்ளதா?

(ஆ) அவ்வாறானால் அது பற்றிய விவரங்களைத் தெரிவிக் கவும்.

(இ நாட்டில் உள்ளமின் உற் பத்தி நிலையங்களுக்கு தற்போது உள்ள தேவையைச் சந்திக்கும் அளவுக்கு தொடர்ந்து நிலக்கரியை வழங்குவதை உறுதி செய்வதற்கான திட்டம் அரசிடம் உள்ளதா?

(ஈ) அவ்வாறானால் அது பற் றிய விவரங்களைத் தெரிவிக்கவும்; இல்லையெனில் அதற்கான கார ணங்களைத் தெரிவிக்கவும்.

இவ்வாறு மாநிலங்களவையில் திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு நாடாளு மன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பதில் வருமாறு:

(அ) மற்றும் (ஆ) : நிலக்கரியின் உள்நாட்டு உற்பத்தி /வழங்கல் நாட்டின் மொத்தத் தேவையான நிலக்கரியின் 80 சதவீதத்தைச் சந் திக்கிறது. 2021-_2022 ஆம் ஆண்டுக் கான மொத்த நிலக்கரி தேவையில் 20 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்தது. 

எஃகு தொழிற்சாலைகளுக்கான எரிக்கும் (கோக் கிங்) நிலக்கரி மற்றும் உயர் தர ஜி.சி.வி. நிலக்கரி (ஜி - 1 முதல்ஜி-8 வரை) கலவைக்கும் (பிளண்டிங்) மற்றும் இதர தொழிற்சாலைப் பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கான நிலக்கரி மொத்த இறக்குமதியில் 65 சதவீதம் ஆகும். இவை பதிலுக்கு உபயோ கிப்பட முடியாத வகையாகும். ஏனெனில் உள்நாட்டு உற்பத்தி குறிப்பிட்ட அளவிலேயே உள் ளது. இத்தகைய நிலையால், சமீப ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதி யில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எது வும் ஏற்படவில்லை. எனினும் மாற்றாக பயன்படுத்தக் கூடிய நிலக்கரியின் இறக்குமதியைக் குறைப்பதற்கு உயர்த்தப்பட்ட உள் நாட்டு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் செய்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிலக் கரியின் மொத்த தேவை / உள்நாட்டு வழங்கல் மற்றும் நிலக் கரி இறக்குமதி கடந்த 5 ஆண்டு களில் செய்யப்பட்ட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

(இ) மற்றும் (ஈ) : நாட்டில் அதிகரித்து வரும் நிலக்கரியின் தேவையைக் கருத்தில் கொண்டு, அதனைச் சந்திப்பதற்காக, நிலக்கரி உற்பத் தியை அதிகரிப்பதற்காக அரசு ஏராளமான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. 100 சதவிகித நேரடி வெளிநாட்டு நேரடி முதலீடு வர்த்தகச் சுரங்கப் பணிகளுக்கு அனுமதிக்கப் படுகிறது. அமைச் சரவைகளுக்கு இடையிலான குழு ஒன்றும் நிலக் கரி இறக்குமதியின் மாற்றுக்காக 2020-இல் அமைக்கப்பட்டது.

எரிப்பதற்கான (கோக்கிங்) நிலக்கரி போன்ற மிகவும் அவசிய முக்கியத்துவமான இறக்குமதியை மட்டுமே அனுமதிக்கவும். தற் போது மாற்று பயன்படுத்த முடியாதவையாக இருக்கும். உயர் தரநிலக்கரி போன்றவற்றை மட் டுமே இறக்குமதி செய்ய அனுமதிக் கவும். மாற்றாகப் பயன்படுத்தப் படக்கூடிய தரக்குறைவான நிலக் கரி இறக்குமதியை உள்நாட்டு நிலக்கரி மூலம் நிறைவு செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. இதர முக்கியமான நட வடிக்கைகளில், வருவாய் பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் வர்த் தக நிலக்கரி ஏலம் நிலக்கரி அல்லது பழுப்பு நிலக்கரி (லிக் னைட்) சுரங்கத்தை குத்தகைக்கு எடுத் திருப்பவர்கள் மூலம் ஆண்டு உற் பத்தியில் 50 சதவிகிதம் அளவுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதிப் பது சம்பந்தப்பட்ட தொழிற் சாலைகளின் தேவைகளை நிறைவு செய்த பின்னர், நிலக்கரி சுரங் கங்களை சுழல் ஏலத்திற்கு விடுவது மற்றும் ஒற் றைச்சாளர அனுமதி அமைப்பின் மூலம் நிலக்கரி சுரங்கங்களின் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவது ஆகியவை இடம் பெற்றுள்ளன.

-இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலளித்தார்.

No comments:

Post a Comment