பொறியாளர் சு. நயினார் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

பொறியாளர் சு. நயினார் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இறையனார் - திருமகள் ஆகியோரின் மருமகனும், இறைவி அவர் களின் வாழ்விணையருமான ஓய்வு பெற்ற தமிழ்நாடு மின் வாரிய செயற்பொறியாளர் சு.நயினார் (வயது 62) நேற்று (25.07.2022) இரவு 9.40 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

இளமைக்காலம் முதலே திராவிடர் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தஞ்சை மாநாட்டு மேடையில் நம்முடைய தலைமையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.

கழகம் நடத்தும் அனைத்து மாநாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதோடு, பல்லாண்டு காலமாக அவற்றை ஒளிப்படம், காணொலி எடுத்து ஆவணப்படுத்துவதிலும், உடனுக்குடன் அவற்றை அச்சுப் போட்டுக் கொண்டுவந்து வியப்பில் ஆழ்த்துவதிலும் தனித்தன்மையும், பிடிவாதமும் கொண்டவர். 

நம் மீதும், குடும்பத்தினர் மீதும் மாறாத 'முரட்டுப் பாசம்' கொண்டவர். நாம் சொல்லும் எதையும் கேட்கக் கூடியவர் என்றாலும், உடல்நலனைக் கவனித்துக் கொள்ளச் சொல்லும்போதெல்லாம், அதில் அவர் அக்கறை செலுத்தவில்லை என்பதற்காக நாம் கடிந்து கொண்டதும் உண்டு.

இறையனாரிடம் அவர் காட்டிய மரியாதையும், அன்பும், அவரை மருமகன் என சொல்லத் தோன்றாது, மகன் என்னும் அளவிலேயே சொல்ல வைக்கும். இறையனாரின் கட்டுரைத் தொகுப்பான 'செயற்கரிய செய்த செம்மல்', 'இசைபட வாழ்ந்த இறையன்', 'இறையனார் பவளவிழா மலர்' ஆகியவற்றை வெளியிட்டவர்.

தோழர் நயினாரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர் இறைவி, மகள் பொறியாளர் புயல், மகன் புகழ் ஆகியோருக்கும் அவர்தம் குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.7.2022 


No comments:

Post a Comment