ஜி.எஸ்.டி. வரி உயர்வு : 5 ஆவது நாளாக நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

ஜி.எஸ்.டி. வரி உயர்வு : 5 ஆவது நாளாக நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

புதுடில்லி, ஜூலை 23- விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 5ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.  

நேற்று (22.7.2022) மக்களவையில் ஒன்றிய அரசைக் கண்டித்தும், விலை வாசி உயர்வு குறித்து பேசஅனுமதி வழங் கக்கோரியும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  பின் னர் அவை மீண்டும் கூடியபோதும் இதே கோரிக்கையை எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் வலியுறுத்தியதால், பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப் பட்டது. விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. பிரச் சினைகுறித்து விவாதிக்க வலியுறுத்தி யதையடுத்து அனுமதி மறுக்கப் பட்டதால் மாநிலங்களவை அடுத் தடுத்து இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

 பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசஅனுமதி மறுக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நேற்றும் (22.7.2022) ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

அக்னிபாத், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்க் கட்சிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதனைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல், இடதுசாரிகள் உள் ளிட்டபல்வேறு எதிர்க்கட்சி உறுப் பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

No comments:

Post a Comment