தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருவள்ளூர், ஜூலை 14 தமிழ் நாட்டில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ரெனால்ட் நிசான் நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் (சிஎஸ்ஆர்) கீழ், ரூ.75 லட்சம் மதிப்பில் 10 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு திரு வள்ளூர் அரசு மருத் துவக் கல்லூரிமருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், மருத்துவ பணி யாளர்கள் பணிக்கு வரும் போது, அவர்களின் குழந்தைகளை பராமரிக்க ஏதுவாக ஜிஎன்கே பவுண்டேஷன் நிறுவன சமூக பங்களிப்பு நிதியின்கீழ், ரூ.15 லட்சம் மதிப்பில், கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய குழந்தைகள் பராமரிப்பு மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மய்யத்தை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று திறந்து 

வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: 

திருத்தணி அரசு மருத்துவமனை, ரூ.47 கோடி மதிப்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. 

அதேபோல், தமிழ் நாட்டில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப் பட உள்ளன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், 

சுகா தாரத் துறை முதன்மை செயலர் செந் தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத் துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன், திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி சுகாதார மாவட் டங்களின் துணை இயக்குநர்

களான ஜவஹர்லால், செந்தில்குமார் மற் றும் வி.ஜி.ரா ஜேந்திரன்,

சந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.


No comments:

Post a Comment