40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

வழக்குரைஞர் சி.டி.மனோஜ் கிஷோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 1 விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார். உடன் திராவிடர் கழக வழக்குரைஞர் துரை அருண். (13.7.2022,சென்னை)

கி.ரமேஷ், சி.முருகன், கே.பழனி ஆகியோர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை சந்தித்து 1 விடுதலை ஆண்டு சந்தா வழங்கினர். (13.7.2022, பெரியார் திடல்)

சமூக ஆர்வலரும், பொறியாளருமான தயாளன் விடுதலை நாளிதழ் இரண்டு  ஆண்டு சந்தாக்களை மாவட்டத் தலைவர் இரா. வீர பாண்டியன் அவர்களிடம் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
நாகை மாவட்டத்தில் மண்டலத் தலைவர் கி.முருகையன் தலைமையில், மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட  செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, வேதாரண்யம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பஞ்சாபிகேசன், மண்டல மாணவர் கழகச் செயலாளர் மு.இளமாறன், ம.இளமாறன்  ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் வேதாரண்யம் பி.வி.இராஜேந்திரன் அவர்கள் 5 ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர், நகர தி.மு.க செயலாளர் மா.மீ.புகழேந்தியிடம் 10 சந்தாவுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டது, வேதாரண்யம், ஆயக்கரன்புலம் ஆர்.எஸ்.அன்பழகன் 1 ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். நாகை நகர செயலாளர் தே.செந்தில்குமார் - கவிதா ஆகியோரிடம் 20 சந்தாக்களுக்கான ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டது. (14.7.2022).

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
பாட்டாளி மக்கள் கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  மறைமலை நகர் சுயமரியாதைச் சுடரொளி துரை முத்து இணையர்  மு.சந்திரா ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார் .  மறைமலை நகர் திமுக செயல் வீரர் அருண்குமார் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  மறைமலை நகர் திமுக நகர்மன்ற உறுப்பினர் சுயமரியாதை வீரர் அரங்க.கிரிச்சந்திரன் 10ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  அதிமுக நகரப்பொறுப்பாளர், மேனாள் நகர்மன்றத் தலைவர் கோபி.கண்ணன் இரண்டாண்டு விடுதலை சந்தாக்கள் வழங்கினார். மே 17இயக்கத்தின் பொறுப்பாளர் மறைமலைநகர் கொண்டல்சாமி இரண்டாண்டு விடுதலை சந்தாக்கள் வழங்கினார்.

எஸ்.ஆர்.எம்.சட்டக்கல்லூரி உதவிப்பேராசிரியர் வ.ஸ்டாலின் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரி உதவிப்பேராசிரியர் கோவி.கனகவிநாயகம்-நந்தினி இணையர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக் கொண்டார்கள்.  செங்கல்பட்டு சட்டமன்ற திமுக உறுப்பினர் வரலெட்சுமி மதுசூதனன் 10ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  மறைமலைநகர் நகர்மன்றத்தலைவர்,  திமுக நகர செயலாளர் ஜெ.சண்முகம் 10ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். மறைமலைநகர் திராவிடர்கழக செயலாளர் திருக்குறள் ம.வெங்கடேசன் இருபது சந்தா இரசீதுபெற்றுக்கொண்டார்.  செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.தீனதயாளன் ஓராண்டு விடுதலை சந்தாவழங்கியதுடன் இருபது சந்தா இரசீதுபெற்றுக்கொண்டார். 

மேனாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் து.மூர்த்தி இரண்டாண்டு விடுதலை சந்தா வழங்கினார். மறைமலை நகர் திமுக நகர்மன்றத் துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன் இரண்டாண்டு விடுதலை சந்தா வழங்கினார்.   மறைமலை நகர் திமுக நகர்மன்றத் துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன் இரண்டாண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் மு.பிச்சைமுத்து ஆறுமாத விடுதலைசந்தா வழங்கியதுடன்பத்து சந்தாஇரசீது பெற்றுக்கொண்டார்.  பொம்மலாட்ட கலைஞர் கலைவாணன்-தமயந்தி இணையர், மருமகள் சீர்த்தி ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டனர்.  மறைமலைநகர்கழகப்புரவலர் லெனின் காவேரிச் செல்வன்-பிரியா இணையர் மற்றும் மகள்கள் மலர், கவிநயா குடும்பத்தினர் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து ஆண்டு சந்தா இரசீது பெற்றுக்கொண்டனர்.








No comments:

Post a Comment