முதலமைச்சர் அறிவித்தபடி 3ஆவது கட்டமாக இலங்கைக்கு ரூ.74 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து கப்பல்மூலம் அனுப்பிவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

முதலமைச்சர் அறிவித்தபடி 3ஆவது கட்டமாக இலங்கைக்கு ரூ.74 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து கப்பல்மூலம் அனுப்பிவைப்பு

தூத்துக்குடி, ஜூலை 24- இலங் கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்க டியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து நிவா ரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் 18ஆம் தேதி சென்னை துறைமு கத்தில் இருந்து முதல் கட்டமாக 9.045 டன் அரிசி, 50 டன் ஆவின் பால்பவுடர், 8 டன் அத் தியாவசிய மருத்துவப் பொருட்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். தூத் துக்குடி வ.உ.சி. துறை முகத்தில் இருந்து 2ஆம் கட்டமாக கடந்த ஜூன் 22ஆம் தேதி ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங் கைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. 

இந்நிலையில் 3ஆம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத் திற்கு அத்தியாவசிய பொருட்கள் 22.7.2022 அன்று வி.டி.சி. சன் கப் பல் மூலம் சென்றது. 

அதனை நாடாளு மன்ற உறுப்பினர் கனி மொழி, சிறுபான்மையி னர் நலன் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூகநலன் மற் றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் அனிதா ராதாகிருஷ் ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். இந்த கப்ப லில் ரூ. 54 கோடி மதிப் பிலான 16.356 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 201 டன் பால்பவுடர், ரூ. 14 கோடி மதிப்பிலான 39 டன் உயிர்காக்கும் மருந் துகள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பில் 16.596 டன் நிவாரண பொருட் கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment