தமிழர் தலைவர் பங்கேற்ற கழக நிகழ்ச்சிகளின் மாட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

தமிழர் தலைவர் பங்கேற்ற கழக நிகழ்ச்சிகளின் மாட்சி!

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் வகுப்பில் பங்கேற்ற தோழர்கள்

படம் 1: குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொறியாளர் 'வீகேயென்' ராஜா, குற்றாலம் பேரூராட்சி செயலாளர் சங்கர், துணைச் செயலாளர் மாரியப்பன் கருணாநிதி, சத்தி கணேசன், 'வீகேயென்' பாண்டியன், உதயகுமார் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். படம் 2: மறைந்த 'வீகேயென்' கண்ணப்பன், ஆச்சி கண்ணாத்தாள் ஆகியோர் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். படம்: 3 'வீகேயென்' கண்ணப்பன் வழியில் தொடர்ந்து இயக்க பயிற்சி முகாமிற்கு உதவிவரும் பொறியாளர்  'வீகேயென்' ராஜாவிற்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.


படம்: 1 குற்றாலம் பயிற்சி முகாமிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், டேவிட் செல்லத்துரை, கு. அய்யாதுரை ஆகியோர் அன்போடு வரவேற்றனர். படம் : 2 பெரியகுளம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவருக்கு லெனின் ரகுநாகநாதன் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். படம்: 3 பிறந்த நாள் காணும் பிரின்சு என்னாரெசு பெரியாருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

படம் 1: ஜெ. ஆனந்த் - மருத்துவர் பா.யுவேதா இணையர் 'பெரியார் உலகத்திற்கு' ரூ.10,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். படம்: 2 பெரிய குளத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த தோழர்கள் தமிழர் தலைவர் முன்னிலையில் இயக்கத்தில் இணைந்தனர். உடன்: கழகப் பேச்சாளர் பெரியார் செல்வன்.


பெரிய குளத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, தி.மு.க மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எல். முக்கையா, பெரிய குளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.


ஆண்டிப்பட்டி நாகராஜன் - உமா இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். 
உடன்: ஜீவா, வித்யா.



போடி ரகுநாகநாதன் - பேபி சாந்தாதேவி ஆகியோரின் 52ஆம் ஆண்டு மணவிழாவையொட்டி தமிழர்  தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி, லெனின்








No comments:

Post a Comment