இந்திய கூர்க்கா ரெஜிமெண்ட்டில் நேபாள நாட்டவர் இடம் பெற்றது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

இந்திய கூர்க்கா ரெஜிமெண்ட்டில் நேபாள நாட்டவர் இடம் பெற்றது எப்படி?

புதுடில்லி, ஜூன் 24- இந்திய ராணு வத்தில் கூர்க்கா ரெஜிமென்ட்ஸ் என்ற படைப் பிரிவு உள்ளது. அதில் 35 பட்டாலியன்கள் உள் ளன. இவற்றில் நேபாள நாட் டைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் பணியமர்த்தப்படு கின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இந்தியா, பிரிட்டன் மற்றும் நேபாளம் இடையே ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்யப்பட் டது. அதன்படி, நேபாள இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கூர்க்கா ரெஜிமென்ட்ஸ் உருவாக்கப்பட் டது. தற்போது, இந்திய ராணு வத்தில், 7 கூர்க்கா ரெஜி மென்ட்ஸ்கள் உள்ளன. இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள ஒரே வெளிநாடாக நேபாளம் உள்ளது.

கூர்க்கா ரெஜிமென்ட்ஸ் படைப் பிரிவில் சேரும் இளைஞர்கள் பெரும்பாலும், மாகர் மற்றும் குருங்க் போன்ற நேபாள மலைவாழ் சமூகத்தி னராக இருக்கின்றனர். அதே போல் கிழக்கு நேபாளத்தை சேர்ந்த கிராட்டி ராய், லிம்புஸ் சமூகத்தினரும், இந்தப் படைப் பிரிவில் அதிகளவில் சேருகின் றனர். மிகுந்த தைரியமும், வீர மும், விசுவாசமும் மிக்கவர்களான இவர்கள், தேசிய பாதுகாப்பு அகாடமி நடத்தும் தேர்வுகள் அல்லது ஒருங்கிணைந்த பாது காப்பு சேவைகள் தேர்வுகளை எழுதி இந்திய ராணுவத்தில் தங் களை இணைத்துக் கொள்ள லாம். அவர்கள் தகுதிக்கேற்ப ராணுவத்தில் படை வீரர்களாக வும், அதிகாரிகளாகவும் பணி யாற்றலாம்.

கார்கில் போரின் போது கூர்கா ரைபிள் பிரிவு பட்டாலி யனில் சிறப்பாக செயல்பட்ட தற்காக, வீர் சக்ரா விருது பெற்ற கர்னல் லலித் ராய், நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார்.  அதேபோல் 2016ஆம் ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய சர் ஜிக்கல் ஸ்டிரைக்கில் முக்கியப் பங்கு வகித்த வடக்கு ராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ் ஹூடாவும் நேபாள நாட்டை சேர்ந்தவர்தான்.

நேபாள ராணுவமும், ராணு வம் சார்ந்த பயிற்சிகளை பெறு வதற்காக அவர்களது அதிகாரி களை, இந்திய ராணுவத்திடமும், அதற்கான கல்லூரிகளுக்கும் தொடர்ந்து அனுப்பி வருகிறது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபிறகு இந்தியர்கள் அடையும் பலன்களை போலவே, நேபாள நாட்டவரும் பலன்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான மருத் துவ வசதிகள், காப்பீடு வசதிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

No comments:

Post a Comment