ஹாங்காங்: கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

ஹாங்காங்: கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது

ஹாங்காங், ஜூன் 24- ஹாங் காங்கில் ஜம்போ மிதக் கும் உணவகம் அந்நாட் டின் முக்கிய அடையா ளங்களில் ஒன்றாக திகழ்ந் தது. ராணி எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உள்ளிட்ட உலக பிரபலங்கள் உணவருந் திய உணவகமாக திகழ்ந்த தோடு, பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் இந்த மிதக்கும் உணவகம் இடம்பெற்றிருந்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக திகழ்ந்த ஜம்போ மிதக் கும் உணவகம், கரோனா பெருந்தொற்றால் பெரும் இழப்பை எதிர்நோக்கி யது. இதையடுத்து கரோனா பொது முடக்கம் காரண மாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜம்போ மிதக்கும் உணவகம் மூடப்பட்டு அதில் பணியாற்றிவந்த அனைத்து பணியாளர்க ளும் பணிநீக்கம் செய்யப் பட்டனர்.

மேலும் உணவகத்தை பராமரிக்க ஆகும் செலவை சமாளிக்க இயலாததால், மிதக்கும் உணவகம் கடந்த 14ஆ-ம் தேதி ஹாங் காங்கில் இருந்து புறப்பட் டது. இந்த நிலையில் தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவிற்கருகில் சென்று கொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்ட தாக அதன் உரிமையாளர் தரப்பில் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப் பலை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் கடைசி யில் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 


No comments:

Post a Comment