உ.பி. பாஜ.க. ஆட்சியில் தொடரும் கொடுமை: உணவு வழங்கும் ஊழியரை ஜாதியைச் சொல்லி தாக்கிய கும்பல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

உ.பி. பாஜ.க. ஆட்சியில் தொடரும் கொடுமை: உணவு வழங்கும் ஊழியரை ஜாதியைச் சொல்லி தாக்கிய கும்பல்

லக்னோ, ஜூன் 22- உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் வினீத் குமார். இவர் உணவு வழங் கும் நிறுவனமொன்றில் வநியோ கப்  பணி செய்து வருகிறார். வினீத் துடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர், தனக்கு வந்த அழைப்பை இவரிடம் கொடுத்து விநியோகம் செய்யுமாறு கேட்டுக்கொண்ட தாகக் கூறப்படுகிறது. அதனால் வினீத் குமாரும் குறிப்பிட்ட முகவ ரியில் விநியோகம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார். வினீத் அந்த முகவரிக்குச் சென்று உணவைப் பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கை யாளரை அலைபேசியில் அழைத் திருக்கிறார்.

வெளியே வந்த அந்த வாடிக்கை யாளர் அஜய் என்பவர் நீ யார்? உன் பெயர் என்ன? உன் ஜாதி என்ன? போன்ற கேள்விகளை கேட்டிருக்கிறார். அதற்கு வினீத் குமார் பதிலளித்தவுடன், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந் தவர் என்பதை தெரிந்துகொண்ட அந்த நபர், “நீ தொட்ட அந்த உணவை நான் தொடமாட்டேன்..!” எனக் கூறிவிட்டு வினீத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு வினீத் குமார் பதிலளிக்கவும், வீட்டிலி ருந்த ஒரு கும்பல் வெளியே வந்து வினீத் குமாரை தாக்கியிருக்கிறது. அவரை தாக்கும்போது அவர்மீது அந்தக் கும்பல் எச்சில் துப்பியதா கவும் கூறப்படுகிறது. மேலும், 

வினீத் குமாரின் இரு சக்கர வாகனத்தையும் அந்தக் கும்பல் அடித்து உடைத்துவிட்டது

அதையடுத்து செய்வதறியாது திகைத்துப்போன வினீத் காவல் துறை உதவி எண்ணை அழைத்து செய்து தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் வினீத்திடம் விசாரணை மேற்கொண்டனர். வினீத் அளித்த தகவல்களின் அடிப் படையில் லக்னோ காவல்துறையினர்,  தாழ்த்தப்பட்டோர் பழங் குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து வினீத்தை தாக்கிய நபர்களைத் தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment