இந்திய பொருளாதார வீழ்ச்சி: ப.சிதம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

இந்திய பொருளாதார வீழ்ச்சி: ப.சிதம்பரம்

புதுடில்லி, ஜூன் 25- இந்தியா வில் பணவீக்கம் அதிக ரித்து உள்ள வேளையில், பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பைக் குறைத்த காரணத்தால் மோடி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற் பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மோடி அரசு தனது நிதி பற்றாக் குறை இலக்கை சில மாதங் களில் அதிகரித்துள்ளது

இதைக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவ ரும், இந்தியாவின் மேனாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ஏப் ரல் 1 முதல் துவங்கி உள்ள புதிய நிதியாண்டில் நாட் டின் மொத்த நிதி பற்றாக் குறை அளவு 6.4 சதவீத மாக இருக்கும் என்று கணித்து அறிவித்து இருந் தது, இதைத் தற்போது 6.7 சதவீதம் வரையில் உயர்ந் துள்ளது என அறிவித்து உள்ளது.

இதுக்குறித்துப் ப. சிதம் பரம் தனது டிவிட் டரில் அரசு சில மாதத்தில் 2022-2023ஆம் நிதியாண்டுக் கான தனது 6.4 சதவீத நிதிபற்றாக்குறை இலக்கை மாற்றியுள்ளது, தற் போது அரசு 2021--2022 நிதியாண்டின் 6.7 சத வீதத்தை நிலைநிறுத்த முயற்சி செய்வதாக அறிவித்துள்ளது என டிவீட் செய்துள்ளார் ப.சிதம்பரம்.

அதிகப்படியான நிதி பற்றாக்குறை அளவீடு, அதிகப்படியான பணவீக் கம், அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம், வெளிநாட்டு செலாவணி இருப்பில் சரிவு ஆகியவை இந்தியா வில் இருப்பதால் அரசு எதைக் கைகாட்டும் எனக் கேள்வி எழுப்பி யுள்ளார் ப.சிதம்பரம்

இதேபோல் இந்திய பொருளாதாரத்தின் ஆரோக்கியம் மோசமாக உள்ளதா என்ற தொனி யில், இந்தியப் பொரு ளாதாரம் ஜீவீஸீளீ ஷீயீ லீமீணீறீtலீ நிலையில் உள்ளதா எனப் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். ப.சிதம் பரம் டிவிட்டுக்கு பலர் பதில் அளித்துள்ளனர், இதில் பலர் ஒன்றிய அரசை விமர்சனம் செய் துள்ளனர். இதேபோல் மற்றொருவர் ப.சிதம்பரத் திடம் அமெரிக்க டால ருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போது 100 ரூபாயை தொடும் எனக் கேட்டுள்ளார். ஆனால் இதேவேளையில் ரூபாய் மதிப்பு 78.32 என்ற வரலாற்று உச்ச விலையை எட்டியுள்ளது

No comments:

Post a Comment