ராகுல்காந்தியின் வயநாடு அலுவலகம் சூறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

ராகுல்காந்தியின் வயநாடு அலுவலகம் சூறை

வயநாடு, ஜூன் 25- கேரள மாநி லம் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் அலுவ லகம் மீது நேற்று (24.6.2022) எஸ்எப்அய் அமைப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி இருக்கைகளை அடித்து நொறுக்கினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இவர் 2019இல் நடந்த மக்களவை தேர் தலில் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாட் டில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதி யில் ராகுல்காந்தி தோல் வியடைந்தார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் வயநாடு தொகுதியில் உள்ள கைநாட்டியில் ராகுல் காந்தியின் அலுவலகம் உள் ளது. டில்லியில் இருந்து தொகுதிக்கு வரும் ராகுல் காந்தி இந்த அலுவலகம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அலுவலகத் தில் காங்கிரஸ் கட்சியி னர் இருந்தனர். அப்போது திடீரென்று அடையா ளம் தெரியாத நபர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் அலுவலகத்தை சூறை யாடி இருக்கைகளை அடித்து நொறுக்கினர். விசாரணையில் அவர்கள் எஸ்எப்அய் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைய டுத்து தாக்குதல் நடத்திய வர்கள் அங்கிருந்து வெளி யேறினர். இதற்கிடையே தாக்குதல் நடத்தும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளி யாகி பரவி வருகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகி றது

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்அய் பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டி னர். இதுபற்றி காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சித்திக் கூறுகையில், "இந்த தாக் குதல் திட்டமிடப்பட்டு எஸ்எப்அய் குண்டர்கள் மூலம் நடத்தப்பட்டுள் ளது. இவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவை சேர்ந்தவருமான கேசி வேணுகோபால் உள்பட பலர் இந்த நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

அனைத்து பாதுகாக் கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்கு சரணால யங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை (ணிநீஷீ ஷிமீஸீsவீtவீஸ்மீ ஞீஷீஸீமீ) கட்டாயமாக் குவது தொடர்பாக சமீ பத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதானால் பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி பகுதிக ளில் உள்ள ஒரு கிலோ மீட்டரில் ஆட்கள் வசிப் பது பற்றி ஆய்வு செய்ய கேரள வனத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் மலை மாவட் டமாக உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்தாலும் இது பற்றி அவர் பேசவில்லை. இதனை கண்டித்து தான் எஸ்எப்அய் சார்பில் தாக் குதல் நடத்தப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.

No comments:

Post a Comment