நிதித்துறையில் நுழையும் நிறுவனங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

நிதித்துறையில் நுழையும் நிறுவனங்கள்

ரிசர்வ் வங்கி எச்சரிக்கைபுதுடில்லி, ஜூன் 18-  பெரிய தொழில்நுட்ப நிறுவனங் களான கூகுள், ஃபேஸ்புக் (மெடா) மற்றும் ஆன் லைன் வர்த்தக நிறுவன மான அமேசான் ஆகி யவை நிதித் துறையில் ஈடுபடுவது பெரும் அச் சுறுத்தலாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளு நர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிறு வனம் நடத்திய நிகழ்ச்சி யில் பங்கேற்று அவர் மேலும் கூறியதாவது:

இந்நிறு வனங்களிடையிலான போட்டி மற்றும் தனிநபர் தகவல் பாது காப்பு கேள்விக்குறியதாக உள்ளது. இந்நிறுவனங் கள் நிதி சேவையில் ஈடு படுவது தொடர் அச்சு றுத்தலாக உள்ளது. இத னால் இவற்றை முறை யாக கண்காணிக்க வேண் டியுள்ளது.

இந்நிறுவனங்கள் இணைய வர்த்தகம், தேடு பொறி, சமூக வலைதளம் என அனைத்து தளங்க ளிலும் ஈடுபட்டுள்ளன. இது தவிர இவை அனைத் தும் மிகப் பெருமளவில் வர்த்தகம் சார்ந்து நிதிச் சேவையில் ஈடுபடுகின் றன.

இவை சுயமாகவோ அல்லது ஏதேனும் நிறு வனத்துடன் இணைந்தோ இத்தகைய சேவையில் ஈடுபடுகின்றன. இவை புதிய தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறை மூலம் செயல்படுத்துகின் றன. ஆனால் இவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

கடனை திரும்ப வசூ லிப்பதில் கடுமையான நடைமுறையை இவை பின்பற்றுகின்றன. ஆபாச வார்த்தைகளில் வாடிக் கையாளரை அகால நேரத் தில் அழைத்து துன்புறுத் துவது உள்ளிட்ட நட வடிக்கைகள் ஏற்புடைய தல்ல. இதுகுறித்து புகார் வந்தால் தீவிரமாக நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்


No comments:

Post a Comment