பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்த்து தரவே ஆளுநரிடம் நில உரிமை அதிகாரம் தரப்பட்டுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்த்து தரவே ஆளுநரிடம் நில உரிமை அதிகாரம் தரப்பட்டுள்ளது

புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஜூன் 27-  பொதுச் சொத்து களை தனியாருக்கு தாரை வார்த்து தரவே ஆளுநர் தமிழிசையிடம் நில உரிமை அதிகாரம் தரப்பட்டு உள்ளது. முதலமைச்சர் தனது அதிகாரத்தை ஆளுநரிடம் விட்டுக் கொடுத்தன் மூலம் தமிழிசை சூப் பர் முதலமைச்சராகவும், ரங்கசாமி டம்மி முதலமைச்சராகவும் இருப் பது நிரூபணமாகியுள்ளது என்று மேனாள் முதலமைச்சர் நாராயண சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மேனாள் முதல மைச்சர் நாராயணசாமி செய்தியா ளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி அரசு செயல்படாத அரசாக உள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. வெளிநாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற் சாலையிடம் கோடிக் கணக்கில் லஞ்சம் பேசப்படுகிறது.

முதலமைச்சர் முதல் அதிகாரி கள் வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. சாலைகள் மோசமாக உள்ளது. தெருவிளக்கு எரிவதில்லை. நகரம் சுத்தமாக இல்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா சரளமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் புதுச்சேரி பின்நோக்கி சென்றுவிடும். ஏன் நிரந்தர ஆளு நரை ஒன்றிய அரசு போடவில்லை. அதற்கு என்ன காரணம். டில்லிக்கு சென்ற ஆளுநர் புதுச்சேரிக்காக என்ன திட்டத்தை கொண்டு வந் தார். ஜிப்மர் சரித்திரத்திலேயே பேராசிரியர்கள் தெருவில் இறங்கி போராடியதை இப்போதுதான். மத்தியில், மாநிலத்திலும் சீர் கெட்ட நிர்வாகம் நடக்கிறது. பெயர் பெற்ற ஜிப்மரை சீரழித்து விட்டார்கள். ஜிப்மரை கவனிக் காத ஒன்றிய அரசால் புதுச்சேரியில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும். கிரண்பேடி காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்பு ஆளு நர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர், அதி காரிகள் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய உள்துறை அமைச்ச கத்தில் நிலுவையில் உள்ள திட் டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற் கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளனர். அப்போது ஆளுநருக்கு நில உரிமை அதிகா ரத்தை வழங்க முடிவு எடுக்கப்பட் டுள்ளது. புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கூட அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மாநிலம்.

முதலமைச்சரையும், அதிகாரி களையும் அழைத்து கூட்டம் நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. அந்த கூட்டத்தை முதலமைச்சர் தான் நடத்தி இருக்க வேண்டும். நிலம் சம்பந்தமான பிரச்னைகளில் முடிவு எடுக்கின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு. புதுச்சேரியில் பொது சொத்துக்கள் நிறைய உள்ளன. எனக்கு கிடைத்த தகவல் படி பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காக ஆளுநருக்கு நில அதிகாரத்தை கொடுத்து இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் சேதராப் பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலம் மற்றும் பொதுத்துறை சொத்து களை கபளீகரம் செய்யும் வேலை நடந்து வருகிறது.

முதலமைச்சர் தனது அதிகாரத்தை ஆளுநர் தமிழிசையிடம் விட்டுக் கொடுத்துவிட்டார். ஆளுநர் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதலமைச்சரா கவும் இருப்பதாக நான் கூறியது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. புதுவையில் ஒரு இன்ச் நிலத்தை கூட தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். இதனை எதிர்த்து போராடுவோம். புதுச்சேரி மக்களின் சொத்தை யாராவது கபளீகரம் செய்ய நினைத் தால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment