இவர் திருந்த மாட்டார் மீண்டும் சனாதனம் பேசுகிறார் ஆளுநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

இவர் திருந்த மாட்டார் மீண்டும் சனாதனம் பேசுகிறார் ஆளுநர்

சென்னை, ஜூன் 27- சனாதன தர்மம், மதம் ஆகியவற்றை ஒருபோதும் ஒப்பிடக்கூடாது. இரண்டும் வெவ் வேறானவையாம்! ஆளுநர் ஆர். என்.ரவி கூறுகிறார்.

ராமகிருஷ்ணா மிஷன் மாண வர் இல்லத்தின் முகப்பு கட்டட மான ‘ஏழைகளின் அரண்மனை’ மற்றும்உறைவிட உயர்நிலைப் பள் ளியின் நூற்றாண்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று (26.6.2022) நடந்தது. 

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நூற்றாண்டு விழாவையொட்டி வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். நலிந்த நாடகக் கலைஞர்கள், துப்பு ரவுப் பணியாளர்கள், கைம்பெண்க ளுக்கு ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் சார்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆளுநர் பேசியதாவது:

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதர்களுக்கு மாபெரும் சக்தியை வழங்கியுள்ளது. அதுவே தற்போது ஆபத்தாகவும் மாறியுள் ளது. தொழில்நுட்பத்தை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த நாம் முடி வெடுக்க வேண்டும்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்ததால், அரசியல், பொருளாதாரம் மட்டு மின்றி நமது கலாச்சாரத்தையும் பெரிய அளவில் இழந்துவிட்டோம்.

அப்போது நம் வாழ்க்கை முறை, தர்மவழிகளில் இருந்து திசை திருப்பப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப் பட்ட மதச்சார்பின்மைக்கும், வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின் மைக்கும் பெரிய வித்தியாசம் இருந் தது.

இந்திய அரசமைப்புதான் நமது ஆன்மா. அதுபோல, நாட்டின் முதுகெலும்பாக சனாதன தர்மமே இருக்கிறது. வேற்றுமையில் ஒற் றுமை என நம்மைப் பற்றி கூறுகி றோம். அதைத்தான் சனாதன தர் மமும் வலியுறுத்துகிறது.

உண்மையிலேயே சனாதனமும், மதமும் வெவ்வேறானவை. மதம் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதன தர்மத்தை பின்பற்றி உள்ளனர். எனவே, இரண்டையும் ஒப்பிடக் கூடாது.

நம் நாடு தற்போது விழித்துக் கொண்டுள்ளது. விவேகானந்தர், காந்தியார் கூறிய ஆன்மிக வழியில் மக்கள் சிந்திக்கவும், செயல்படவும் தொடங்கியுள்ளனர்.

ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள வர்களுக்கு எதிராக செயல்படுவது சரியல்ல. அனைத்து கடவுள்களுக் கும் இடமுள்ளது. ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அது தர்மமே இல்லை.

விவேகானந்தரின் கனவு பார தத்தை உருவாக்க, தர்மத்தை வளர்க்க வேண்டும். அதற்கு ஆன் மிக வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும். 

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment