செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

செய்தியும், சிந்தனையும்....!

என்ன வாடை?

* பொதுக்குழுவில் பங்கேற்க செல்வதற்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் தன் வீட்டில் ''கோ பூஜை'' நடத்தினார்.

>> பி.ஜே.பி.யின் வாடை புரிகிறதா?

பதில் தேவை

* தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் முன்னேற்றத்துக் காக பாடுபடுவதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக திரவுதை முர்முவுக்கு ஆதரவு தருவார்னு நம்புவோம். 

- 'தினமலர்'

>> அய்.அய்.டி. உள்ளிட்ட கல்வி, வேலை வாய்ப்பு களில் எஸ்.ஸி., எஸ்.டி.,யினருக்கு உரிய இடம் பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசில் தரப்படு கிறதா?

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்களில் எஸ்.ஸி., எஸ்.டி.,யைச் சேர்ந்த செயலாளர்கள் உண்டா? 

இன்றைய குடியரசுத் தலைவர் பூரி ஜெகந்நாதர் கோவிலிலும், ராஜஸ்தான் பிரம்மா கோவிலிலும் அவமதிக்கப்பட்டாரே - எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

பதில் தேவை!


No comments:

Post a Comment