வீடுதோறும் விடுதலை!!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

வீடுதோறும் விடுதலை!!!

செழியன்:  மண்ணாங்கட்டி நில்லுப்பா எங்க இந்த பக்கம்?

பகுத்தறிவு : அண்ணா வணக்கம் ஒரு திருத்தம் என் பெயர் மண்ணாங்கட்டி அல்ல பகுத்தறிவு.

 செழியன்:  கேள்விப்பட்டேன். மண்ணாங்கட்டி என்ற பெயரை பகுத்தறிவு என்று நீ மாற்றிக் கொண்டதாக இப்பொழுது எல்லாம் அனைவருக்கும் மரியாதை கொடுக்கிறாய் கல்லூரியில் படிக்க கூடிய மாணவர்களை சந்தித்து உரையாடுவதுதாகவும் படித்து விட்டு வேலை இல் லாமல் இருப்பவர்களை சந்தித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் அறிந்தேன். மகிழ்ச்சி இப்படித்தான் இருக்க வேண்டும்.

எப்படி இப்படி ஒரு முன்னேற்றம் உனக்குள்...

பகுத்தறிவு : அதுவா அண்ணா தினந்தோறும் விடுதலை பேப்பர் படிக்கிறேன் அதனால் ஏற்பட்ட மாற்றம் அண்ணா.

செழியன்: விடுதலை பேப்பர் படிப்பதால் எப்படி மாற்றம் ஏற்படும்?

பகுத்தறிவு : நானும் இப் படித்தான் கேள்விகளை எழுப்பினேன் திராவிடர் கழகத் தோழர்கள் என்னை கட்டாயப்படுத்தி தான் விடுதலை பேப்பர் வாங்க வைத்தார்கள். நானும் முகச் சுளிப்புடன்தான் விடுதலை பேப்பரை வாங்கினேன். தினந்தோறும் எங்கள் வீட்டுக்கு விடுதலை பேப்பர் வரும். அதை நான் புரட்ட ஆரம்பித்தேன் ஆரம்பத்தில் சலிப்பு ஏற்பட்டது விடுதலை பேப்பரை படிக்க படிக்க அறிவு ஆற்றல் கூடியது. ஏன் எதற்கு என்ற கேள்வி எனக்குள் எழும்பியது தினந்தோறும் ஆசிரியருடைய அறிக்கையை படிக்கும் பொழுது உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்பட்டது.

 தந்தை பெரியார் எழுதிய கட்டுரைகள் அதைப் படிக்கும் போது எனக்குள் புதைந்து கிடந்த ஆற்றல் மேலோங்கியது.

ஆசிரியர் எழுதிய வாழ் வியல் சிந்தனை கட்டுரை படிக்கும் பொழுது உடலுக்கும் உள்ளத்திற்கும் மருந்தாக அமைகிறது.

மின்சாரத்தின் கட்டுரைகளை உடனுக்குடன் பதில் படிக்கும் பொழுது நெஞ்சை நிமிர்த்தி செல்ல செய்கிறது.

உலக நிகழ்ச்சிகள் வேலை வாய்ப்பு இதையெல்லாம் நான் தெரிந்து கொண்டு என் அருகில் இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய அவர்களை சந்தித்து இந்த பேப்பரை அவர்களிடம் தந்து, இதில் இருக்கும் செய்திகளை படிக்கச் சொல்வது என் வேலையாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறேன் அண்ணா.

செழியன் :  அப்படியா? அப்படி என்றால் எனக்கும் விடுதலைப் பேப்பர் வர ஏற்பாடு செய் நானும் சந்தா கட்டுகிறேன்.

பகுத்தறிவு : மகிழ்ச்சி அண்ணா உடனடியாக செய்கிறேன்.

செழியன் : நன்றி பகுத்தறிவு.

கண்மணி:  பகுத்தறிவு அண்ணா வணக்கம் எங்கு வந்தீர்கள்?

பகுத்தறிவு: நகராட்சி தலைவரை சந்திக்க வந்தேன் நகராட்சிக்கு விடுதலை பேப்பர் வர வைப்பதற்காக அவரிடம் பேசி இருந்தேன் அதற்காக அவர் வர சொல்லி இருக்கிறார் அதற்காக வந்தேன் கண்மணி நீ எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படி செல்கிறது? உன் குடும்பம் எப்படி இருக்கிறது.

கண்மணி:  நான் நன்றாக இருக்கிறேன், அண்ணா நீங்கள் மட்டும் விடுதலை பேப்பரில் வந்த வேலைவாய்ப்பைத் தராமல் இருந்திருந்தால் நானும் இன்று ஒரு சராசரி பெண்ணாக தான் இருந்திருப்பேன் நகராட்சியில் வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் அண்ணா.

செழியன் : நீ நன்றி சொல்ல வேண்டுமென்றால் 'விடுதலை' பேப்பருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

விடுதலைப் பேப்பரை தன் உயிர் மூச்சாகக் சுவாசித்து கொண்டிருக்கும் தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு தான் நீ நன்றி சொல்ல வேண்டும.

இன்றே வாங்குங்கள் விடுதலை நாளேடு நீங்கள் மட்டும் படித்தால் போதாது, மற்றவரையும் படிக்கத் தூண்டுங்கள் நன்றி !!

ஆக்கம்:  ரமாபிரபா ஜோசப், வடலூர்.



No comments:

Post a Comment