ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல், காங்கிரஸ் கட்சியின் தலைமை மிகவும் வலுவிழந்துள்ளதை காட்டு கிறது என தலையங்க செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவாரை முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி விரும்புவதாக தகவல்.

* மதவாதம் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக ஒன்று திரண்டு போராட தனது 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் லாலு பிரசாத் மக்களுக்கு வேண்டுகோள்.

தி டெலிகிராப்:

* ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான திவ்யா பார்மசி, மருந்துகள் சட்டத்தை மீறுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதயம் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கான சில தயாரிப்புகளின் விளம்பரங்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதாக ஒழுங்குமுறை அதிகாரிகளிடம் கூறியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஆர்எஸ்எஸ் உத்தரவை பின்பற்றி பாஜக வெறுப்பு அரசியலை நடத்துவதாக அகிலேஷ் குற்றச்சாட்டு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment