இதுதான் பிஜேபி ஒன்றிய அரசின் பொருளாதாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

இதுதான் பிஜேபி ஒன்றிய அரசின் பொருளாதாரம்!

எல்.அய்.சி. நிறுவன பங்குகள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. எல்.அய்.சி. நிறுவனத்தின் பங்கு விலை, அதன் பங்கு வெளியீட்டின் போது 

ரூ.949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு மாத காலத்தில் அதன் பங்கு விலை, நாள் தோறும் குறைந்து, ரூ.681 என்ற நிலையில் இறங்கி வர்த்தகமானது ஒரு மாதத்தில், 29% இழப்பை இந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அடைந்துள்ளனர். 

எல்.அய்.சி. நிறுவனத்தின் மதிப்பு, பங்கு வெளியீட்டின் போது ரூ. 6.02 லட்சம் கோடியாக இருந்தது. தொடர் சரிவு காரணமாக அதன் மதிப்பு ரூ. 1.40 லட்சம் கோடியாகக் குறைந்திருக்கிறது. அப்படி இருந்தும் சந்தை மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனம், தற்போது நாட்டின் ஏழாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. ஒரு மாத காலத்தில் 1.4. லட்சம் கோடி ரூபாய் மதிப்பை அந்த நிறுவனம் இழந்திருப்பது மிகவும்  அதிர்ச்சிகரமான ஒன்றாகும்.

சந்தை மதிப்பில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்பது, டாடா மோட்டார்ஸ், ஹின்டால்க்கோ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் மொத்த மதிப்பை விட அதிகமாகும்

பணவீக்கம், வட்டி விகித உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தை தற்போது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. 

இந்த நிறுவனத்தில், ஆங்கர் முதலீட்டாளர்கள் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்டுகள், பெரிய நிதி நிறுவனங்கள் இந்த வகை முதலீட்டாளர்களின் கீழ் வருவார்கள். இந்த வகை முதலீட்டாளர்கள் புதிய பங்குகள் வெளியீடு செய்யப்பட்ட ஒரு மாத காலம் வரை, தமது பங்குகளை விற்க முடியாது. 

28 சதவீத வீழ்ச்சியுடன் தற்போது வர்த்தகமாகும் எல்.அய்.சி. நிறுவனப் பங்குகளை, இந்தத் தடைக் காலம் முடிவுற்ற பிறகு ஆங்கர் முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கும் பட்சத்தில் மேலும் இந்த நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடையவே, அதிக வாய்ப்பு உள்ளது.

எல்.அய்.சி. நிறுவன பங்குகளை வாங்குவதற்காக பல புதிய முதலீட்டாளர்கள், 'டீமேட்'  கணக்குகளை ஆரம் பித்து, புதிதாக தமது முதலீட்டை மேற்கொண்டனர். அவர்களுக்கு தற்போது எல்.அய்.சி. கசப்பான அனுபவத்தைத் தந்திருக்கிறது. பங்குச்சந்தை என்றால் ஆபத்தானது என்றும், சூதாட்டம் போன்றது என்றும் இன்னும் நமது நாட்டில் பலர் எண்ணிக் கொண்டிருக் கிறார்கள். 

வளர்ந்த உலக நாடுகளை ஒப்பிட்டால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பங்குச் சந்தையில் கணிசமாக புதியவர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில், இந்த வீழ்ச்சி ஒட்டுமொத்தமாக பங்குச் சந்தைக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நன்றாக சென்றுகொண்டு இருந்த எல்.அய்.சி. நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் சூழ்ச்சியின் மூலம் முதலில் அதன் பங்குகளை சந்தையில் விற்று, பெரும் இழப்பைக் காட்டி, பிறகு தனியாருக்கு விற்கும் திட்டமே மோடி மற்றும் நிர்மலா சீதாராமனின் சிந்தனையில் உதித்தது. அவர்கள் திட்டமிட்டபடி  சரியாக எல்.அய்.சி. நிறுவனம் பங்குச் சந்தையில் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது.

பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசின் பொருளா தாரம் என்பது இந்தத் திசையில் தான் வாயு வேகத்தில் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து கொண்டுள்ளது.

அம்பானி - அதானி என்னும் தண்டவாளத்தில் மோடி ‘சொகுசாக’ பயணித்துக் கொண்டுள்ளார்.

கரோனா காலத்தில் நாட்டின் பெரும்பாலான மக்கள் வேலை வாய்ப்பின்றிப் பரிதவித்த நிலையில் - கார்ப்ப ரேட்டுகளின் கொள்ளை இலாபக் குவிப்பு 35 விழுக்காடு என்றால், நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி யாருக்கானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே!


No comments:

Post a Comment