கருநாடகாவில் ஹிந்துத்துவா அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

கருநாடகாவில் ஹிந்துத்துவா அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றுவதா?

எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு மாணவர் அமைப்பினர் போராட்டம்

பெங்களூரு, ஜூன்5- பாஜக ஆளும் கருநாடகாவில் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட் டங்களில் ஹிந்துத்துவாவைப் புகுத்தும் திட்டமாக பாடத் திட்டங்களில் மாற்றங்கள் செய் யப்பட்டுள்ளதற்கு அம்மாநிலத் தில் கடும் எதிர்ப்பு வெடித் துள்ளது. 

 ப‌ள்ளி பாடநூலை மாற்றி அமைப்பதற்கு 2020இல் அப் போதைய முதலமைச்சர் எடியூ ரப்பாவால் ரோஹித் சக்ரதீர்த்தா என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பள்ளி பாடநூலில் இருந்து பசவண்ணர், திப்பு சுல்தான், தந்தை பெரியார், பகத் சிங், நாராயணகுரு ஆகியோர் தொடர்பான பாடங்களை நீக்கியது. ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் குறித்த பாடம் சேர்த்தது. இதனைக் க‌ண்டித்து அம்மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சியினரும், முற்போக்கு மாணவ அமைப்பின ரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபல எழுத் தாளர்களின் கதைகள் நீக்கப்பட் டத‌ற்கு, எழுத்தாளர்கள் தரப் பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல அறக்கட்டளை தலை வர்களும், ஆணைய உறுப்பி னர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர். 

காங்கிரசு கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் (என்எஸ்யுஅய்) தும்கூரில் க‌ல் வித்துறை அமைச்சர் பி.சி.நாகே ஷின் வீட்டை முற்றுகையிட்டு  2.6.2022 அன்று போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராகவும், பி.சி.நாகே ஷூக்கு எதிராகவும் காங்கிரசார் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் அமைச்சரின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்திய போராட்டக்கா ரர்கள், தீப்பந்தங்களை அவரது வீட்டுக்குள் எறிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் காங்கிரசை சேர்ந்தவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசின் குழுக்களிடமிருந்தே கிளம்பிய எதிர்ப்பு

கருநாடக மாநில அரசின் பல்வேறு குழுக்களிடமிருந்தே எதிர்ப்பு வெடித்துள்ளது. பாடத் திட்ட மறுஆய்வுக்குழுவின் தலை வர் ரோகித் சக்ரதீர்த்தாவுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்படா ததைக் கண்டித்து, மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுக்களிலி ருந்தே எழுத்தாளர்கள் விலகி வரு கின்றனர். ராஷ்டிர கவி அறக் கட்டளை தலைவர் எழுத்தாளர் எஸ்.ஜி.சித்தராமய்யா, டாக்டர் ஜி.எஸ்.சிவருத்ரப்பா பிரதிஷ்தனா, எச்.எஸ்.ராகவேந்திர ராவ், நடராஜ புடாலு, சந்திர சேகர் நங்கேலி ஆகியோர் தாங்கள் வகித்து வந்த பதவிகளி லிருந்து விலகும் கடிதத்தினை அம்மாநில முதலமைச்சர் பசவ ராஜ் பொம்மைக்கு  அனுப்பி யுள்ளனர். பதவி விலகல் கடிதத் தில், அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமாக கல்வி, கலாச்சார, அரசியல் தளங்களை ஒடுக்கு கின்ற அரசின் நடவடிக்கை அண்மைக்காலமாக நடந்து வருவது மிகவும் கவலைக்குரியது. மாநில அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகின்ற, வகுப்புவாத வெறுப்புணர்வினை வெளிப் படையாக புகுத்தி வருவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் அமைதி காப்பது என்பது கவலை அளிப்பதுடன் அச்சமூட்டுவ தாகவும் அமைந்துள்ளது என்று எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள் ளனர்.

குவேம்பு குறித்தும், கருநாடக மாநிலத்தின் நாட்டுப்பண்ணை யும் அவமதித்தவர்கள்மீது நட வடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து கருநாடக மாநிலத் தின் மூத்த எழுத்தாளரும், கல்வியாளருமான ராஷ்டிரகவி குவேம்பு பிரதிஷ்தனா தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 

கருநாடக மாநிலத்தின் பாடத் திட்டத்தில் ஹிந்துத் துவாத் திணிப்பைக் கண்டித்து பெங்களூருவில் வழக்குரை ஞர்கள் ஒன்றிணைந்து போராட் டம் நடத்தியுள்ளனர்.


No comments:

Post a Comment