சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உலகத் தரத்தில் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம் அய்ரோப்பிய ஒன்றிய குழு சென்னை வருகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உலகத் தரத்தில் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம் அய்ரோப்பிய ஒன்றிய குழு சென்னை வருகை

சென்னை, ஜூன் 23 கல்வியை கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் அனைத்து வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதிலும் மாநகராட்சி பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக திகழ வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் படிப்பு வாசனையே மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் முதல் தலைமுறையாக படிப்பதற்காக வருகின்ற ஒரே இடமாக மாநகராட்சி பள்ளிகளாக உள்ளன.  

எனவே இங்கு படிக்கும் மாண வர்களுக்கு அதிகப்படியான கூடுதல் கவனம் கொடுக்கப்பட வேண்டியுள் ளது. அந்த வகையில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உலகத் தரத்தில் உயர்த்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, வெளிநாடுகளில் இருப்பதை போன்ற வகுப்பறைகள், கல்வி முறைகள் உள்ளிட்டவற்றை சென்னை மாநக ராட்சி பள்ளிகளிலும் அமைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் மேம் படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளார்.

இத்திட்டத்தில், ரூ.95.25 கோடி மதிப்பில் 28 பள்ளிகள் ‘மார்டன்’ எனப்படும் நவீன வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறியதாவது:  பிரான்சு மேம் பாட்டு முகமை மற்றும் அய்ரோப்பிய ஒன்றிய நிதி உதவியுடன் செயல் படுத்தப்பட்டு வரும் புதுமைப்படுத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைத்திருத் தலுக்கான நகர முதலீடுகள் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியுடன் சென்னை சீர்மிகு நகர திட்டம் இணைந்து ரூ.95.25 கோடி மதிப்பில் சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப் புகளை நவீன வசதிகளுடன் மேம் படுத்தப்பட்டு வருகின்றன.

நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங் களை செயல்படுத்துவதற்கான நகரங் களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் இந்தியா  முழுவதும் 65 நகரங்கள் கலந்து கொண்டு தங்களது திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நகரங்களில் சென்னையும் ஒன்று. குறிப்பாக கல்வி தொடர்பான உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தும் திட்ட அறிக்கை சமர்ப்பித்த 2 நகரங்களில் சென்னை ஒன்றாகும். இத்திட்டத்தில்  சென்னை பள்ளிகளின் உட்கட் டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரான்சு மேம்பாட்டு முகமையின் சார்பில் ரூ.76.20 கோடி கடன் உதவி யாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளுக்காக சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.19.05 கோடியும் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது.  

அய்ரோப்பிய ஒன்றிய தூதர் மேயருடன் ஆலோசனை

இத்திட்டம் தொடர்பாக, இந்தியா மற்றும்  பூடான் நாட்டிற்கான அய்ரோப்பிய ஒன்றிய தூதர் யூகோ அஸ்டுடோ தலைமையிலான  குழு வினர் மேயர் பிரியாராஜனை நேற்று சந்தித்தனர். அப்போது, இத்திட்டத்தின்  கீழ் சென்னைப் பள்ளிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள்  குறித்தும், இத்திட்டத்தை சென்னைப் பள்ளிகளில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு  செல்வது குறித் தும் ஆலோசனை மேற்கொண்டனர்.சென்னைப் பள்ளிகளில்  மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் சென்னையின் வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் உதவி  புரிய தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

No comments:

Post a Comment