தேடப்பட்ட குற்றவாளிக்கு பிஜேபியில் முக்கிய பொறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

தேடப்பட்ட குற்றவாளிக்கு பிஜேபியில் முக்கிய பொறுப்பு

சென்னை, ஜூன்.23  சென் னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந் நிறுவனம் பெயரில்சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப் பிடப்பட்டிருந்தது. 

இந்த விளம்பரம் பணம் மீதான ஆசையைத் தூண்டி,மோசடி செய்யும் திட்டம் என புகார் எழுந்தது.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண் டனர். இந்நி  றுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், இயக் குநர்கள் பாஸ்கர், மோகன் பாபு கைது செய்யப்பட்டனர். 

ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள், 70 வங்கிக் கணக் குகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தலை மறைவாக உள்ள நிர்வாகி களான உஷா, ஹரிஷ், ராஜசேகர் உட்பட மேலும் சிலரை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் 4-ஆவது குற்றவாளி யாக சேர்க்கப்பட்டிருந்த ஹரிஷை தற்போதுவரை காவல்துறை தேடிவரும் நிலையில் அவருக்கு பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது. 

இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment