பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் நாள்

திருச்சி, ஜூன் 7- பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் நாளி னையொட்டி மூலிகை மருந்தியல் துறை சார்பில் 6.6.2022 அன்று கல்லூரி வளாகத்தில் மரக்கன்று கள் நடப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு தலை மையேற்ற பெரியார் மருந்தியல் கல்லூயியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அய்ந்து வகை நிலங்களாக பகுத்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதர்கள் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் கார ணமாக செயற்கை வாழ்க்கை முறைக்கு மாற லாயினர். அதன் விளைவு காடுகள் அழிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், வாக னப் பெருக்கம் போன்ற வற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றது. இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ் வொரு ஆண்டும் 5.6.2022 அன்று உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படு கிறது.

மாணவர்கள் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் மிதி வண்டி பயன்பாட்டை அதிகப்படுத்துதல், சாலையோரம் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகளை நடுதல் போன்ற சமுதாய பயனுள்ள செயல்பாடு களை மேற்கொள்ள வேண் டும் என்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவ ரும் பங்கெடுக்க வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் பேராசிரி யர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாண வர்களால் நடப்பட்டது.

No comments:

Post a Comment