தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 76 சதவிகிதம் கூடுதல் மழை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 76 சதவிகிதம் கூடுதல் மழை

சென்னை, ஜூன் 29 தமிழ்நாட்டில்  வழக்கத்தை விட ஜூன் மாதத்தில் 76% கூடுதலாக மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் 166 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: 

கடந்த 1ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முன்தினம்) வரை தமிழ்நாடு, புதுவையில் 74.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 166 மி.மீ, ராணிப்பேட்டை 156.3 மி.மீ. திருப்பத்தூரில் 137.9 மி.மீ, நீலகிரி 132.4 மி.மீ., திருவள்ளூரில் 119.1.மி.மீ., பெரம்பலூரில் 118.3 மி.மீ., வேலூரில் 116.2 மி.மீ., கிருஷ்ணகிரி 114.3 மி.மீ, சிவகங்கையில் 111 மி.மீ, சேலத்தில் 104.7 மி.மீட்டரும் மழையும் பெய்துள்ளது. இந்த நேரத்தில் இயல்பாக 42.3 மி.மீட்டர் தான் மழை பெய்யும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் 76%  அதிக மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment