40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

 கோவை மாவட்டம்-60,000 விடுதலை சந்தா சேர்ப்பு பணி தொடங்கப்பட்டு விட்டது

விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 60 ஆண்டுகள் தொண்டிற்கு நன்றி காட்டும் வகையில் மதுரையில் நடை பெற்ற கழகப் பொதுக்குழுவில் 60,000 விடுதலை சந்தாக்களை திரட்டி 40 நாட் களில் ஆசிரியரிடம் வழங்கி மகிழ்வது என முடிவு செய்யப்பட்டது

கோவை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர்கழக கலந்துரையாடல் கூட்டம் 26-06-2022 கோவை சுந்தராபுரம் செந்தில்நாதன் வணிக வளாகத்தில் நடைபெற்றது,

150 நபர்கள் 10 விடுதலை சந்தாக் கள் வீதம் 1500 சந்தாக்கள் கோவை மாவட் டத்திற்கு தலைமைக்கழகத்தால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன 

26-06-2022 அன்று முதற்கட்டமாக 50 நபர்களுக்கு விடுதலை சந்தா நன் கொடை புத்தகம் மற்றும் துண்டறிக் கைகளை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மண்டல செய லாளர் சிற்றரசு, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ. பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச் செய லாளர் நா.கமல்குமார், மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் ராகுலன் ஆகி யோர் முன்னிலையில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங் கினார். 27-06-2022 அன்று முதல் உட னடியாக பணியை தொடங்குவதாக கழகத்தோழர்கள் மகிழ்வுடன் தெரிவித்து நன்கொடை புத்தகங்களை பெற்று கொண்டனர்.

விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் தீவிரமாகும் தருமபுரி மண்டலம்

ஜூன் 28, 29, 30 தேதிகளில் ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் மாநில கழக அமைப்பாளர், ஒரத்தநாடு இரா குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் மற்றும் மாவட்ட தலைவர் செயலாளர் சுற்றுப் பயணம்!

மதுரையில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் இடம்பெற்றிருந்தாலும், விடுதலை ஒவ் வொருவரின் வீட்டில் சேர்க்கும் வகை யில் விடுதலை சந்தா சேர்ப்பு என்னும் சிறப்பு தீர்மானத்தை 40 நாட்களில் முடித்தே தீர வேண்டும் என தமிழர் தலைவர் அவர்கள் அறைகூவல் விடுத் துள்ளார். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் அந்தந்த மாவட்ட தலைவர், செயலாளர் அடங்கிய நிர்வாகிகளும் இணைந்து கழக பொறுப்பாளர்களையும்  தோழர்க ளையும், இன உணர்வாளர்களையும், விடுதலை வாசகர்களையும் மற்றும் முக் கிய பிரமுகர்களையும் நேரில் சந்தித்து விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் களம்  காண வருகிறார்கள்.

எனவே அந்தந்த மாவட்டத் தலை வர்கள், மாவட்ட  செயலாளர்கள் அடங் கிய குழுவினர் 28-6-2022 ஓசூர் மாவட் டத்திலும், 29-6-2022 கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், 30-6-2022 தருமபுரி மாவட்டத்திலும் நேரில் சென்று தோழர் களை சந்திக்க வருகை தர உள்ளார்கள். மாவட்ட பொறுப் பாளர்கள்  சந்திக்கும் தோழர்களின் பட்டியலைத் தயாரித்து விடுதலைச் சந்தா சேர்க்கும் பயணத்தை சிறப்பாக நடத்திட உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்ற அணிகளின் பொறுப்பாளர்கள்  வருகிற தோழர் களுக்கு ஒத்துழைப்பினை தருமாறு மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல  கழகத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன், மண்டல கழக செயலாளர் பழ.பிரபு கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment