அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு, நேரடி 2ஆம்ஆண்டு மாணவர் சேர்க்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு, நேரடி 2ஆம்ஆண்டு மாணவர் சேர்க்கை

பெரம்பலூர், ஜூன் 28 , அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலா மாண்டு, நேரடி 2ஆம்ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

 பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசினர் தொழில்நுட்ப் கல் லூரியின் 2022- -  2023ஆம்கல்வியாண் டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி 2ஆம்ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு வருகிற 8ஆம் தேதி வரை https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண் ணப்பிக்கலாம். 

மேலும், இணையதளம் வாயி லாக விண்ணப்பிக்க இயலாத மாணவ-, மாணவிகளுக்கு கல்லூரி யில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு விண் ணப்ப கட்டணம் இல்லை. கல்வி கட்டணம் இலவசம். 

சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணம் ஆண்டு ஒன் றுக்கு ரூ.2,200 ஆகும். முதலாமாண்டு சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணை யான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி 2ஆம்ஆண்டு சேர்க்கைக்கு மேல் நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றி ருப்பதுடன், இயற்பியல், கணிதம், வேதியியல், கணிப்பொறியியல், மின் னணுவியல், தகவல் தொடர்பு, உயி ரியல், இன்பர்மேடிக்ஸ் பிராக்டிசஸ், பயோ-டெக்னாலஜி, டெக்னிக்கல் வொகேஷனல் சப்ஜக்ட், விவசாயம், பொறியியல் கிராபிக்ஸ், பிசினஸ் ஸ்டடிஸ், என்டல்ப்ரிநெர்ஷிப் ஆகியவற்றில் ஏதேனும் மூன்று அல்லது 10ஆம்வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கல்லூரியில் சிவில், மெக்கா னிக்கல், இ.சி.இ., இ.இ.இ., கணினி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகள் சேரலாம். மாணவர்களுக்கு அரசு இலவச விடுதியும், மாணவிகளுக்கு கல்லூரிக்கு எதிரே அரசு இலவச விடுதியும் உள்ளது. 

தகுதியுடைய மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பு பிரிவின் மூலமாக மூன்றாமாண்டு இறுதியிலேயே வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இணையவழியில் விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் அறிய கல்லூரிக்கு நேரி லோ அல்லது கல்லூரியின் 04328-243200 என்ற தொலைபேசி எண் ணிலும், 8056614377, 9994019207, 8610933968, 9962488005, 9994333392, 9952787062, 9894985106 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். 

இந்த தகவல் கீழக்கணவாய் அரசினர் பாலி டெக்னிக் கல்லூரி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment