2026இல் மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கி கணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

2026இல் மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கி கணிப்பு

புதுடில்லி, ஜூன் 22-  கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் கடன் சுமை, 2026ஆம் ஆண்டு 35 சதவீதத் திற்கும் அதிகமாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது. 

புதுடில்லி, கேரளா, ராஜஸ் தான், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய ஆகிய 5 மாநிலங்களின் கடன் சுமை, 2026ஆம் ஆண்டு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இந்த மாநில அரசுகளின் செலவினங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 2026இல் கேரளாவின் கடன் சுமை மாநில உள்நாட்டு உற்பத்தியில் 37.2% ஆகவும், ராஜஸ்தானின் கடன் சுமை 39.8% ஆகவும், மேற்கு வங்கத் தின் கடன் சுமை 34.2% ஆக வும், பீகாரின் கடன் சுமை 38.7% ஆகவும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களின் வரி வருவாயில் 20%-க்கு அதிகமாக வட்டி செலவுகளுக்கு ஒதுக்கப்படுகி றது. அதே சமயம் 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கடன் சுமை மாநில உள்நாட்டு உற் பத்தியில் 27.7% ஆக உயரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment