நான் இந்து தான்! மாட்டுக்கறி சாப்பிடுவேன்! என்னைக் கேள்வி கேட்க நீ யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

நான் இந்து தான்! மாட்டுக்கறி சாப்பிடுவேன்! என்னைக் கேள்வி கேட்க நீ யார்?

மேனாள் முதலமைச்சர் சித்தராமையா காட்டம்

தும்கூர், மே 26- கருநாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர், மேனாள் முதலமைச்சர் சித்த ராமையா, "ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) பல் வேறு மதங்களை பின்பற்றும் மக்களுக்கு இடையே தடைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டிய தோடு, மாட்டிறைச்சி உண்பவர்கள் ஒரு சமூகத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல. நான் ஓர் இந்து. நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிடவில்லை, ஆனால் விரும்பினால், நான் சாப்பிடுவேன். என்னைக் கேள்வி கேட்க நீ யார்? மாட்டிறைச்சி உண்பவர்கள் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் கள் அல்ல, முஸ்லிம்கள் மட்டும்தான் மாட்டிறைச்சி சாப்பிடு கிறார்களா? இந்துக்கள் கூட மாட்டிறைச்சி சாப்பிடு கிறார்கள், கிறிஸ்தவர்களும் சாப்பிடுவார்கள். ஒரு முறை, கருநாடக சட்டசபையில் கூட அதை நான் சொல்லியிருக்கிறேன், மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?" என்று கேள்வி எழுப்பினார்.

15-18 வயது பிரிவில் 80 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி

புதுடில்லி, மே 26- ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் நேற்று முன்தினம் (24.5.2022) வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. 15 முதல் 18 வயது வரையிலான சிறாரில் 80% பேருக்கு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதேபோல 12 முதல் 14 வயது வரையிலான சிறாரில் 70% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இவை கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதுவரை 192.52 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம்: பஞ்சாப் முதலமைச்சர் நடவடிக்கை

சண்டிகர், மே 26- பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் பகவந்த் மான் கூறும்போது, "சுகாதாரத் துறையின் ஒப்பந்தங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் வாங்குவதில் விஜய் சிங்லா ஒரு சதவீதம் லஞ்சம் பெறுவதாக என்னிடம் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கோ, ஊடகங்களுக்கோ தெரியாது. எனினும் லஞ்ச விவகாரத்தை மூடி மறைக்க விரும்ப வில்லை.

முறைப்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் விஜய் சிங்லாவின் குற்றம் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் பதவி நீக்கம்செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போர் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மொகாலி காவல்துறையினர், லஞ்ச வழக்கில் விஜய் சிங்லாவை 24.5.2022 அன்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதுதொடர்பாக டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங் கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் சுட்டுரையில் 24.5.2022 அன்று வெளியிட்ட பதிவில், "முதலமைச்சர் பகவந்த் மானை பாராட்டுகிறேன். அவரது லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை கண்கலங்க செய்கிறது. ஒட்டுமொத்த நாடும் ஆம் ஆத்மி குறித்து பெருமிதம் கொள்கிறது" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment