மயிலா - மனிதனா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

மயிலா - மனிதனா?

டில்லியில் ‘மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற தலைப்பில் பிரதமரின் அரசியல் பயணத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

பிரதமர் மோடியின் உணர்ச்சிகரமான பக்கத்தைப் பற்றி பேசுகையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் அலுவலகத்தில் பசியுடன் இருந்த மயிலுக்கு உணவளிப்பதை உறுதி செய்வதற்காக அலுவல் கூட்டம் நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை விவரித்தார். பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் இரக்க உணர்வு கொண்டவர் என்று குறிப்பிட்டு பிரதமர்தம் ஆளுமையின் அந்த அம்சத்தை வெளிப்படுத்தும் ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார்.

“பிரதம அமைச்சர் அலுவலகத்தில் அலுவல் கூட்டம் ஒன்று  நடந்து கொண்டிருந்தபோது பறவை ஒன்று கண்ணாடியை அதன் அலகினால் தட்டிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, மயில் பசியுடன் இருப்பதை உணர்ந்த பிரதமர் மோடி, பறவைக்கு உணவளிக்குமாறு தனது ஊழியர்களிடம் கூறினார். இவ்வளவு தீவிரமான சந்திப்பில் ஈடுபடும் போது மயிலைப் பற்றி யோசிப்பது - அவர் எவ்வளவு உணர்ச்சி மிக்கவர் என்பதைக் காட்டுகிறது. பிரதமர் திறமையான தலைவர் ஆவார். மோடிக்கு அனுபவம் இல்லாத போதிலும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று மிகச் சிறப்பாக பணியாற்றினார்” என்று அமித் ஷா கூறினார்.

2020 ஆம் ஆண்டு கரோனா இரண்டாம் அலையில் மக்கள் செத்துக் கொண்டு இருந்தனர். சாலை ஓரங்கள் உடல்கள் எரிக்கும் இடுகாடுகளாக மாறின, திறந்தª வளிப்பூங்கா, மைதானம் மற்றும் வயல்வெளிகள் எல்லாம் இடுகாடுகளாக மாறின. எங்குபார்த்தாலும் பிணங்கள் எரிந்துகொண்டு இருந்தன, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி 44 லட்சம் மக்கள் கரோனாவால் இறந்துள்ளனர் என்று தெரியவந்தது. 

 ஆனால்  பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் மயிலுக்கு உணவளித்துக் கொண்டு யோகா செய்துகொண்டு இருந்தார்.  இன்று  ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் விற்கிறது. சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1015 ஆகி விட்டது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 ரூபாயாக பாதாளத்தில் சென்றுகொண்டு இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி இரவு 

8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி  இன்று இரவு 

12 மணியிலிருந்து  முழு ஊரடங்கு என்று கூறினார். விளைவு  லட்சக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. நீருக்கும், சோறுக்கும் வழியின்றி தங்கள் சிறு குழந்தை களையும், உடமைகளையும் சுமந்து நடந்து சென்றார்கள்.

இரயிலில் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கிப் பயணிக்கலாம் என்றார். அந்தப் பணத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவர் அறிவித்த பிறகுதான் 'ஞானோதயம்' ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு! குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது என்ன நடந்தது? உச்சநீதிமன்ற நீதிபதியால் நீரோ மன்னன் என்று மோடிக்குப் பட்டம் சூட்டப்படவில்லையா? அமித்ஷாக்கள் மோடியை நிறுத்தும் தூண்கள் தானே; அப்படித்தான் பேசுவார்கள்; மயிலா? மனிதனா? மக்கள்தான் சிந்திக்க வேண்டும். 

பட்டினிச் சாவில் இந்தியா தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது. மக்களுக்கு சாப்பாடு இல்லை. இவற்றைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையே இல்லை. "மக்கள்"உயிர் போனாலும் பரவாயில்லை,  ஒரு "மயிலுக்கு" உணவு அளிப்பது, மிகவும் முக்கியம் என்று கருதுகிறார். அதையும் உள்துறை அமைச்சர் பெருமைபடக் கூறுகிறார். 

தெரிந்து கொள்வீர் மோடியின் ஆட்சியை!

No comments:

Post a Comment