எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய அதிகாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய அதிகாரம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மசோதா தாக்கல்

சென்னை மே 10 தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தாக்கல் செய்த சட்ட மசோதா வில் கூறியிருப்பதாவது:  

குஜராத், தெலங்கானா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் துணை வேந்தரை நியமனம் செய்வதற்கு அம்மாநிலத்தில் உள்ள சட்டங்கள் வழிவகை செய்துள்ளது. இதேபோல, தமிழ்நாட்டிலும், 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சட்டத்தினை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்வதாக சட்டமுன்வடிவில் தெரிவித்துள்ளது.

இச்சட்ட திருத்ததின்படி வேந்தர் என் பதற்கு பதிலாக அரசு என்ற சொற்றொடர் மாற்றம் செய்யப்படுவதாகவும், துணை வேந்தர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலோ துணை வேந்தரை பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரின் விளக்கத்தை கேட்கும் விதமாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் அல்லது, அரசு தலைமைச்செயலாளருக்கு குறை யாத ஒரு அலுவலரை கொண்ட ஒருநபர் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப் பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி விசாரணை அறிக்கையின் அடிப்படை யில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் 

ரூ.25 ஆயிரம் அபராதம் மசோதா தாக்கல்

சென்னை, மே 10 தமிழ்நாடு சட்டப் பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்துள்ள சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது: திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலம் மற்றும் கழிவுநீரை பாகுபாடின்றி வெளி யேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மலம் மற்றும் கழிவு நீரின் பாதுகாப்பான வெளியேற்றுதலை உறுதி செய்வதற்கு, சரக்கு வண்டிகள், இழுவை வண்டிகள் அல்லது கழிவு நீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குளங்களின் வெளியேற்று தலுக்காக பயன்படும் பிற வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்தை ஒழுங்கு முறைப்படுத்துதல் தவிர்க்க முடியாத தாகும். எனவே மலம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் தேசிய கொள்கைக்கு ஏற்ப ஒரு விரிவான செயல்திட்டத்தை அரசு உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் 1978ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தம் செய்வ தற்காக இந்த சட்டமசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி கழிவுநீர் தொட்டியில் அல்லது அங்குள்ள துப்புரவு அமைப்பில் அபாயகரமாக சுத்தம் செய்தலில் நேரடியாகவோ, மறை முகமாகவோ எந்த நபரும் ஈடுபடவில்லை என்பதை உரிமையாளர் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இச்சட்டத்தில் விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை மீறினால் முதல் குற்றத்திற்காக ரூ.25 ஆயிரம், 2ஆவது முறை குற்றம் செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் வரை நீட்டிக்கப் படலாம். அவர் அபராதத் தொகையுடன் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment