ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

ஒய்.எஸ்.ஆர். கட்சியின் சார்பாக தெலுங்கானா பிற் படுத்தப்பட்டோர் நல சங்க தலைவர் ஆர்.கிருஷ் ணைய்யா மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

மோடி அரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம், வேலையின்மை, வெறுப்பு அரசியலை கண்டித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, இடது சாரி கட்சிகள் மே 26, 27 தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஞானவாபி மசூதியில், தவறான கேள்வியை விவாதித்துக் கொண்டிருக்கிறோம். புராணங்களின் கூற்றுக்கள் அல்லது இடைக்கால பிடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நீதிமன்றங்கள் செயல்பட முடியாது என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜுபேரி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

பீகார் மாநிலத்தில் எரியும் பிரச்சினையாக மாறியுள்ள ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தனது கட்சி எப்போதும் ஆதரவாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி யின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

பாஜக ஆளும் கருநாடக அரசின் பள்ளிக் குழுவில் பத்தாம் வகுப்பில்  ஆர்.எஸ்.எஸ். நிறுவனரும் இந்து ராஷ்டிர ஆதரவாளருமான கேசவ் பலிராம் ஹெட் கேவார் தொடர்பான பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment