திராவிடப் பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

திராவிடப் பெண்

பேருந்தில் பெண்கள் 

காசின்றி பயணித்தால், 

ஓசியில் பயணம் தான்

திராவிட மாடலா என

குருமூர்த்தி பேச்சு.


நல்ல பொருளைத் 

தானம் வாங்குதல் 

பிராமணன் தருமம் 

( அத்தியாயம் 4 . 2)

என மனுஸ்மிருதியில்

எழுதி வைத்து இன்றும்

கருமாதி வீட்டில் அரிசி

வாங்குவது ,"ஓசி" 

இல்லையா 

குருமூர்த்தி ?


நாடாளும் அரசனுக்கு

யாகம் செய்வித்து 

வீடு போகங்களை 

தானமாகப் பெற்றதை 

( அத்தியாயம் 7 . 79 )

மனுஸ்மிருதியில் 

பதிவு செய்த போது 

“ஓசி” இல்லையா 

குருமூர்த்தி ?

வேள்விக்குடி எனும் 

தானம் பெற்ற ஊர்

களப்பிரர் ஆட்சியில் 

கைப்பற்றப்பட்டதால்

பிராமண வாரிசுகள் 

வீதியில் நின்று ஓலமிட்டு

பாண்டிய மன்னரிடம் 

மீண்டும் பெற்றது

“ஓசி” இல்லையா 

குருமூர்த்தி ?


ஆலயத்தின் உள்ளே

ஆண்டவனைத் தரிசிக்கும்

அவனது பக்தர்கள் 

எட்டி நின்றாலும் 

தட்டை நீட்டி அதில்

அய்ந்தும் பத்துமென 

அன்றாடம் பெறுவது

"ஓசி" இல்லையா 

குருமூர்த்தி?


படி தாண்டாப் பத்தினி

என்றே பெயரிட்டு

படிக்கவும் இயலாமல்

படித்தாலும் அவர்கள்

பணி செய்ய முடியாமல்

பெண்களின் உரிமைகளைத் 

தடுத்த பழக்கத்தை

அடித்து நொறுக்கிய பெண்கள் 

இலவச பேருந்து பயணம்

“ஓசி” என்று தெரிகிறதா 

குருமூர்த்தி? 

(இணையத்திலிருந்து)


No comments:

Post a Comment