'சமூநீதிக்கான சரித்திர நாயகர்' மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

'சமூநீதிக்கான சரித்திர நாயகர்' மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை!

வெற்றியின் உயரம் அளவிடற்கரியது!

தி.மு.. ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக் காலத்தில், அதன் சாதனையின் உயரம் அளவிடற் கரியது என்று கூறி, பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் கூட்டணி கட்சிகளோடு  இணைந்து போட்டியிட்டு  தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 07.05.2021  அன்று ஆட்சியமைத்தது

207 வாக்குறுதிகள் நிறைவேற்றம்!

ஓராண்டினை நிறைவு செய்யும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு..ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் முதலமைச்சரின் ஆட்சிமுறையின் பெருமை பரவியுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் ஓராண்டிலேயே 207 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

.தி.மு.. சாதித்தது என்ன?

தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, மத்தியில் முழு பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக என இருகட்சி கூட்டணியையும் வீழ்த்திய தி.மு.. தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து ஓராண் டினை நிறைவு செய்கிறது .திமுக. ஆட்சி தொடங் கியவுடனே அச்சுறுத்திய கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட முதலமைச்சர் மு..ஸ்டாலின், திறமை யான அதிகாரிகளை தனது அரசின் தூண்களாக நிற்க வைத்து மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கடை கோடி மக்களைச் சென்றடையும் வகையில் அமைத் துள்ளார்.

முதல் கையெழுத்து

ஆட்சிப் பொறுப்பேற்று கோட்டைக்குச் சென்ற நிலையில், முதலமைச்சர் கையொப்பமிட்ட கோப்புகள்

1. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4000 கரோனா நிவாரண நிதி; அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு; மக்களின் மனுக்கள்மீது தீர்வுகாணஉங்கள் தொகுதியில் முதலமைச்சர்;'  முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றவர்களுக்கும் பொருந்தும் - இவற்றிற்கு எடுத்த உடனேயே ஒப்புதல் அளித்தார்.

* மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்.

* முதன் முதலாக வேளாண் துறைக்கு என தனி யாக நிதிநிலை அறிக்கை.

* கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக சுமார் 55 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங் கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி ரத்து.

* கூட்டுறவு வங்கிகள்மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட ரூ.5,250 கோடி நகைக் கடன்கள் தள்ளுபடி.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.

* அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழில் கல்வி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு.

* திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்தச் சலுகை.

* தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர் நலன்களைப் பேணிட ரூ.317.40 கோடி ஒதுக்கீடு (இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கல்).

* தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல வாரியம்.

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின்மூலம் நடத்தப்படும் அரசுப் பணி களுக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயம்.

* நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி இரு மசோதாக்கள் (ஆளுநரிடம் போராடி, கடைசியாக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வைத்தது).

முதுகலை மருத்துவப் படிப்பில்
27 விழுக்காடு இட ஒதுக்கீடு

* மருத்துவத் துறை முதுகலைப் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக சட்டப் போராட்டம் நடத்தி அகில இந்தியாவிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பயன் அடையச் செய்த பெரும் சாதனை.

* தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனைகளை வழங் கிட பொருளாதார நிபுணர்கள் குழு.

* நீட்' தேர்வு எதிர்ப்பு

* தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநிலத்துக் கென புதிய கல்வித் திட்டம் உருவாக்கம்.

* மாநில உரிமைகளுக்கான குரல் - மத்திய அரசு என்ற சொல்லாடலை நீக்கி - ஒன்றிய அரசு என விளித்தல்.

* பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்பு

* மீண்டும் உழவர் சந்தை புனரமைப்பு.

அரசின் முதல் மூன்று மாதங்களை கரோனா பாதிப்புகளை சரிசெய்வதில் கவனம் செலுத்தினர். அடுத்ததாக இரண்டு மாதங்கள் மழை, வெள்ள பாதிப்பு களை சீர் செய்வதில் சென்றது.  தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசின் முக்கியமான சவாலாக உள்ளது என்னவென்றால், ஒன்றிய அரசிடம் இருந்து பங்குத் தொகை, நிதியுதவி எதுவும் சரிவர கிடைப்பதில்லை என்பதே. ஆனால் இந்த கடுமையான சூழலிலும் அரசு சவால்களை எதிர்கொண்டு இயன்றவரை சிறப்பாக பணியாற்றுகிறது என்றே சொல்ல வேண்டும்.

அரும்பெரும் சாதனைகள்!

தந்தை பெரியார் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாளாக'' அறிவித்து உறுதிமொழி கூறச் செய்தது.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ‘‘சமத்துவ நாளாக'' அறிவித்து உறுதிமொழி கூறச் செய்தது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை ‘‘அரசு விழாவாக'' நடத்திட அறிவிப்பு.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்து நடத்திய போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை; முத்தமிழ் அறிஞர் கலைஞர் சட்டம் இயற்றியும் செயல்பாட்டுக்கு வராத நிலையில், கலைஞர் மொழியில் சொல்லவேண்டும் என்றால், ‘‘தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமல் புதைத்துவிட்டோம்'' என்ற நிலை - நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு..ஸ்டாலின் அந்த முள்ளை அகற்றிய அரும்பெரும் சாதனை!

திராவிட மாடல்!

திராவிட மாடல் ஆட்சி'யின் அடிப்படை உரிமை களில் முதன்மையானது மாநில உரிமை. இதனை நிலைநிறுத்துவதற்காக தயக்கமின்றி ஒன்றிய அரசை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்புகின்றார் நம் முதல மைச்சர்.  பதவிக்கு வந்த பிறகு ஒன்றிய அரசுக்கு பல்லக்கு தூக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் போல் இல்லாமல் ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கு எதிரான போக்குகளைக் கண்டிக்கும் நாட்டின் முதன்மையான முதலமைச்சராக மாண்புமிகு மானமிகு மு..ஸ்டாலின் உள்ளார்.

தஞ்சை களிமேடு தேர் விபத்து மற்றும் அடித்தட்டு மக்களின் குரலைக்கேட்டு ஓடோடிச்சென்று அவர்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றுவது, முந்தைய மாநில மற்றும் ஒன்றிய அரசுகளைப் போல் வெளிநாட்டு முதலீடு என்றமாய வித்தை'களைக் காட்டாமல் ஒரு வெளிநாட்டுப் பயணம் - அதன்மூலம் பெற்ற அந்நிய முதலீடுகள் - அதில் பலவற்றை உடனடியாக நிறை வேற்றிய செயல் திறன்களால் மக்களின் நம்பிக்கையை வென்ற முதலமைச்சராக உள்ளார்.

முக்கியமாக சமூக நல்லிணக்கத்தைக் குலைத்திட மத வன்முறைகள் தாண்டவமாடத் தொடங்கும் காலகட்டத்தில் தமிழ்நாட்டை அமைதிப்பூங்காவாக நிலைக்கச் செய்து பல மாநிலங்களில் உள்ள பெரு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வரத்துவங்கியது பெருமைக்குரிய ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக அய்க்கிய அரபு நாடுகளிலிருந்து தொழில் முதலீட்டுத் தொகை ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

இன்னும் நான்காண்டுகளில்...

 இதை எல்லாம் கண்டு எரிச்சலில் ஒன்றிய அரசும், ஹிந்துத்துவ அமைப்புகளும், இங்குள்ள கூலி அமைப்புகளுடன் சேர்ந்து தொடர்ந்து மதவாதம் மற்றும் ஜாதியவாதத்தை தூக்கிக்கொண்டு அலை கின்றன. முக்கியமாக லாவண்யா விவகாரம் மற்றும் தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் போன்றவற்றைத் தூக்கிக்கொண்டு மக்களுக்கான ஆட்சியை எப்படியாவது பெரும் பான்மை ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சியாக சித்தரிக்க முயல்கின்றன.

ஆனால்,  நமது முதலமைச்சர் ஆட்சிக்கு எதிரான வர்களை எல்லாம் மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். நமது மக்களுக்கான ஆட்சியை, அவர் களின் நலனுக்காக  இரவு பகலாக உழைப்பதே கடமை என்று பணியாற்றிகொண்டு இருக்கிறார் நமது முதலமைச்சர். ‘திராவிட மாடல் ஆட்சி'யின் ஒராண்டு சாதனைகள் ஒருபக்கத்தில் முடிந்துவிடுவன அல்ல.

இன்னும் நான்கு ஆண்டுகளில் குவிய இருக்கும் சாதனை மலைகளின் முன் எதிர்க்கட்சிகளும், மதவாத ஆதிக்க சக்திகளும் கண்ணுக்கே தெரியமாட்டார்கள் என்பது உறுதி!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மனம்  - மணம் நிறைந்த வாழ்த்துகள்!

 

கி.வீரமணி
தலைவர்,
 திராவிடர் கழகம்
சென்னை 
7.5.2022     


No comments:

Post a Comment