காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை சிண்டுமுடிச் சண்டை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை சிண்டுமுடிச் சண்டை

சென்னை, மே 17- பாலாற்றங் கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் முன்னோற்றுதலின் பொழுது இரு பிரிவினருக்கு மிடையே மோதல் ஏற்பட்டது. வடகலை,தென்கலை பார்ப்பனர் களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

2 ஆண்டுகள் கழித்து நடை பெற்ற வரதராஜப்பெருமாள் கடவுளர் சிலையைக்  கொண்டு சென்று பாலாற்றில் இறங்கும் நிகழ்வின்போது இரு பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கிடையே யான மோதல் குறித்து காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய் யப்பட்டு விசாரணை நடை பெறுகிறது.

இதனையடுத்து வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை பிரிவில் வேத பாராயணம் செய்ய அறநிலையத்துறை அனு மதி மறுத் தது. தொடர்ந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப் பட்டது.  

இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வேதபாராயணம் பாடுவதில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும் வட கலை, தென்கலை பிரச்சினையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தென்கலை பிரிவினரை மட்டும் வேதபாரா யணம் பாட அனுமதித்தது பாரபட்சமானது என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வடகலை பிரிவினர் வேத பாராயணம் செய்ய அனுமதி மறுத்து உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

முன்னதாக வடகலை, தென் கலை இடையே நிலவும் பிரச்சினையை ஒழுங்கு படுத்தவே அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. 


No comments:

Post a Comment