அரபுநாடுகளில் பணிக்குச் செல்லும் செவிலியர்கள் குறித்து தரக்குறைவான பேச்சு சங்கியை வீட்டிற்கு அனுப்பியது கத்தார் அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

அரபுநாடுகளில் பணிக்குச் செல்லும் செவிலியர்கள் குறித்து தரக்குறைவான பேச்சு சங்கியை வீட்டிற்கு அனுப்பியது கத்தார் அரசு

திருவனந்தபுரம், மே 10- அரபு நாடுகளில் பணிக்குச் செல்லும் செவிலியர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய துர்காதாஸ் சிசு பாலனை பணி நீக்கம் செய்து நாடுகடத்தியது கத்தார் அரசு

ஹிந்து இளைஞர் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலம் திரு வனந்தபுரத்தில் ஏப் 28 முதல் மே 1 வரை மாநாடு நடைபெற்றது.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் ஹிந்து மத அடிப்படை வாதிகள் பலரும் கலந்து கொண்டு பேசினர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய துர் காதாஸ் சிசுபாலன், “கேர ளாவில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் செவிலியர்கள் அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாதிக ளுக்கு பாலியல் அடிமை களாக உள்ளனர்” என்று பேசினார்.

அவரது இந்தப் பேச்சு சர்ச்சையானது, மேலும் கத்தார் உள்ளிட்ட பல் வேறு அரபு நாடுகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம் பியதோடு, செவிலியர்கள் முன் அவர் ஒரு சொட்டு தண்ணீருக்காக ஏங்க வேண்டிய காலம் வரும் என்றும் விமர்சனத்துக்கு உள்ளானார்.கேரள அர சின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கிவரும் மலை யாளி மிஷன் அமைப்பின் கத்தார் பிரிவு பிரமுகராக உள்ள துர்காதாஸ் சிசு பாலன் தோஹா-விலுள்ள நரங் ப்ரொஜெக்ட்ஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இவரது இந்த பேச்சு தொடர்பாகவும் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகளில் ஹிந்துக்கள் பொருட்கள் ஏதும் வாங் கக்கூடாது என்று அந்த மாநாட்டில் பேசியவர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள காவல்துறையில் பல் வேறு அமைப்புகள் புகா ரளித்துள்ளன. இந்நிலை யில், இந்த வெறுப்பு பேச்சு காரணமாக நரங் ப்ரொஜெக்ட்ஸ் நிறுவ னத்தில் இருந்து துர்கா தாஸ் சிசுபாலன் பணி நீக்கம் செய்யப்பட்டுள் ளார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங் களில் சமீபகாலமாக ஹிந்து மாநாடு என்ற பெயரில் வெறுப்பு மற் றும் வன்முறையை தூண் டும் பேச்சுக்கள் அதிக ரித்து வரும் நிலையில் கருநாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங் களிலும் இதே போன்ற சர்ச்சைப் பேச்சுக்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்து வதாக உள்ளது.

No comments:

Post a Comment