பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பந்தாடப்படும் நேர்மையான அதிகாரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பந்தாடப்படும் நேர்மையான அதிகாரிகள்

‘உத்தரவுகளை செயல்படுத்துவதில்லை’ ‘சொல்வதை கேட்பதில்லை’ எனக் கூறி உத்தரப்பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) முகுல் கோயலை பதவியில் இருந்து நீக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச காவல்துறை ஆணையராக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவியேற்றவர் முகுல் கோயல். 1987-ஆம் ஆண்டு பிரிவு அய்.பி.எஸ். அதிகாரியான இவர், இதற்கு முன்பாக உத்தரப்பிரதேசத் தின் அல்மோரா, மீரட், மணிப்பூரி, சஹரான்பூர் உள்ளிட்ட 7 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந் திருக்கிறார். தான் பணிபுரிந்த மாவட்டங்கள் அனைத்திலும் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துகளை ஒழித்தவர் என்ற பெயர் முகுல் கோயலுக்கு உண்டு.

இதனிடையே, உத்தரப்பிரதேச டி.ஜி.பி.யாக முகுல் கோயல் பொறுப்பேற்றது முதலாகவே அவருக்கும், அமைச்சர்கள் பலருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு மாறாக அவர் செயல் படுவதாகவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. ஒருகட்டத்தில், இந்த விவகாரம் முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்தின் கவனத்துக்கு செல்லவே, முகுல் கோயலை அழைத்து அவரும் கண்டித்ததாக தெரிகிறது.

இருந்தபோதிலும், தனது செயல்பாடுகளை முகுல் கோயல் மாற்றிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் முதலமைச்சரின் உத்தரவு களுக்குக்கூட அவர் அடி பணிவதில்லை என்ற சூழல் உருவானது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த வாரம் முதலமைச்சர் யோகி தலைமையில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட் டத்தை டி.ஜி.பி. முகுல் கோயல் புறக்கணித்தார். இது, முதலமைச்சருக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டி.ஜி.பி. முகுல் கோயல் டி.ஜி.பி. பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவர் ஊர்க் காவல் படை இயக்குநராக மாற்றப் படுவதாகவும் உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டது. அரசின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இருந்தது; பணியில் ஆர்வம் இல்லாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த உத்தரவில் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது - இது உண்மையான காரணமல்ல.

'ராம் நவமி' அன்று ஹிந்துத்துவ அமைப்புகளின் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து இஸ்லாமியர்கள் குடியிருப்புகளுக்குச் செல்லும் பாதையில் கடுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டார், 

இது தொடர்பாக வெளிப்படையாகவே ஹிந்துத்துவ அமைப்புகள் இவரை மிரட்டி இருந்தனர். இந்த நிலையில் சாமியார் முதலமைச்சரே ஹிந்துத்துவ அமைப்புகளின் தலைவர் போல் செயல்பட்டு இவரை பணியிலிருந்து நீக்கி உள்ளார்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாநில அரசு செயல்பட்டதால் பதவி விலகினார் கருநாடக தலைமைக் காவல் ஆணையர்.

போலி ஜாதிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறிய கருநாடக தலைமைக்காவல் ஆணையரை இடமாற்றம் செய்ததால் அவர் பதவி விலகினார். 

 கருநாடகாவில் காவல்துறையில் போலியான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப்பிரிவு சான்றிதழ்களை வழங்கி அதன் மூலம் நூற்றுக்கணக்கான காவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். 

அவர்கள் மூலம் காவல்துறையில் பலகோடி ரூபாய் ஊழல் பணம் கைமாறி உள்ளது என்று புகார் வந்தது. இதனை அடுத்து பல அதிகாரிகளின் இந்த புகார் குறித்து விசாரிக்க ஆணையிட்டும், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், தலைமைக்காவல் ஆணையர் பி. ரவீந்திரநாத் நேரடியாக தானே விசாரணையில் இறங்கினார். இதில் சமீபத்தில் காவல்துறையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்ந்தவர்களில் 700 பேர்களின் சான்றிதழ்கள் போலி யானவை என்றும் சமூகத்தில் மிகவும் உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொள்ளும் சிலர் கூட தாழ்த்தப்பட்டோர் என சான்றிதழ்வாங்கி காவல்துறையில் சேர்ந்திருப்பதும் தெரியவந்தது, 

இதுகுறித்த முழு அறிக்கையை அவர் மாநில முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மையிடம் சமர்ப்பித்தார். ஆனால் வியப்பிற்குரிய வகையில் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தாமல் காலத் தையும் தனது பதவிக்கான கண்ணியத்தையும் காக்க தவறிவிட்டார் என்று கூறி மாநில அரசு அவருக்கான பல சலுகைகளை பறித்தது, முக்கியமாக அவருக்கு என்று பாதுகாப்பிற்கு இருக்கும் காவலர்களை வேறு பணிக்கு செல்ல உத்தரவிட்டு அவரது பாதுகாப்பிற்கு எந்த ஒரு காவலர்களையும் நியமிக்கவில்லை.  இந்த நிலையில் அவரை காவலர் பயிற்சிப்பள்ளியில் மேற்பார்வையாளர் பணிக்கு அனுப் பியது, மிகவும் உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் கிட்டத்தட்ட துணை ஆய்வாளர் நிலையில் பணியாற்ற கருநாடக அரசால் நிர்பந்திக்கப் பட்டார். இந்த நிலையில் அவர் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் ஆளுநர் அரசுக்கு சாதகமாகவே நடந்து கொண்டார். இதனை அடுத்து அவர் தனது அய்.பி.எஸ். பதவியிலி ருந்து விலகினார். இது தொடர்பாக அவர் கருநாடக மாநில தலைமைச் செயலாளர் ரவிக்குமாருக்கு எழுதியுள்ள பதவி விலகல் கடிதத்தில் குறிபிட்டுள்ளதாவது, “நான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ரின் சான்றிதழ்களைப் பெற்று காவல்துறையில் சேர்ந்தவர்கள் குறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை நியமிக்க கோரியிருந்தேன், போலிச்சான்றிதழ்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் காவல்துறையில் ஊடுருவி உள்ளனர். இவர்களால் எப்படி நேர்மையாக காவலர் களுக்கான சேவையை மக்களுக்கு கொடுக்க முடியும்?

 ஆனால் அரசு அக்குழுவை அமைக்க முன்வரவில்லை. நானே நேரடியாக விசாரணை செய்து 500க்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்கள் தொடர்பான சான்றுகளை அரசின் பார்வைக்கு அனுப்பினேன், அச்சான்றுகளை ஆய்வு செய்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக என்னை அதிகாரமில்லாத பதவிக்கு மாற்றம் செய்தனர்.   இந்த நிலையில் நான் இந்தப்பதவியில் இருக்கமுடியாது" என்று பதவிவிலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   சமீபத்தில் ரூ.1200 கோடி அல்லது அதற்கு அதிகமாக கொடுத்தால் கருநாடக முதலமைச்சராக டில்லி மேலிடம் நியமிக்கும் என்று பாஜகவின் மேனாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப் பினருமான பசங்கவுடா குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மாநில தலைமைக்காவல் ஆணையர் தனது கீழ் உள்ள காவல்துறையில் பல கோடி ரூபாய்கள் ஊழல் பணம் கைமாறி போலிச்சான்றிதழ்களைப் பெற்று பணி பெற்றிருப்பதை சான்றுகளோடு சமர்ப்பித்தவரையே இடமாற்றம் செய்ததன் மூலம் கருநாடக சட்டமன்ற உறுப்பினர் கூறியது உண்மையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. 


No comments:

Post a Comment