ராணுவத்தில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

ராணுவத்தில் காலிப் பணியிடங்கள்

துணை ராணுவப் படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ், காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : நயிப் சுபேதார் (சாலை & பாலம் 17, ரிலிசியஸ் டீச்சர் 9), ஹவில்தார் கிளார்க் 287, ஹவில்தார் (ஆப்பரேட்டர் ரேடியோ, லைன்) 729, ரைபிள்மேன் 256, வாரன்ட் ஆபிசர் 10 உட்பட மொத்தம் 1380 இடங்கள் உள்ளன. இதில் மாநில வாரியான பணியிடங்களில் அதிகபட்சமாக நாகாலாந்தில் 115 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டுக்கு 57 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி : சில பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, சில பதவிகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.8.2022 அடிப்படையில் கிளார்க், ஆப்பரேட்டர் ரேடியோ, பாரா மெடிக்கல் 18 - 25, மற்ற பதவிக்கு 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 6.6.2022

விவரங்களுக்கு : www.assamrifles.gov.in/english/


No comments:

Post a Comment