செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

செய்தியும், சிந்தனையும்....!

எந்தக் கலாச்சாரம்?

* இந்திய கலாச்சாரத்துடன் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்தது.       - வானதி சீனிவாசன்

>> ஆக, பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்ற கலாச்சாரமா?

வாக்கு யாருக்கு?

* இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழகம்.

- ஆளுநர் ரவி

>> ஆன்மிகத்தில் மூழ்கிய தமிழர்கள் திராவிடர் கழகங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். - குருமூர்த்தி, 'துக்ளக்'

ராமன் கதை என்ன?

* ராமநவமியின்போது 7 மாநிலங்களில் கலவரம்.

- அசோக் கெலாட்

>> இராமனே தவம் செய்த சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றவன்தானே!

கிறுக்கர்களா?

* இரயில்வே தேர்வு எழுத தமிழக மாணவர்கள் காஷ்மீர் செல்லவேண்டும்.

- இரயில்வே தேர்வாணையம்

>> ஏன், சந்திர மண்டலத்துக்கு அனுப்பலாமே!


No comments:

Post a Comment