தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் சாதனை-வேதனை இதுதானா? சந்தை மதிப்பில் எல்அய்சி- சரிவோ சரிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 25, 2022

தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் சாதனை-வேதனை இதுதானா? சந்தை மதிப்பில் எல்அய்சி- சரிவோ சரிவு

புதுடில்லி, மே 25- நாடு விடு தலையடைந்தபின்னர் பல்வேறு கட்டமைப்புகள் இந்தியாவின் நவீன சிற்பி என்றழைக்கப்பட்ட அப்போதைய பிரதமர் நேரு போன்ற தலைவர்களால் திட்ட மிடப்பட்டு உருவாக்கப்பட்டது. 

கடந்த 2014ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அமைந்ததிலிருந்து பொதுத்துறை நிறுவனங்களை சிதைக்கும் நோக்கில் தனியார் மயப்படுத்தலைத் தொடங்கி விட்டது.

ஒன்றிய நிதியமைச்சரும்கூட பொதுத்துறைநிறுவனங்கள் தனியார்மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுவருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய ஆயுள்காப்பீட்டு நிறு வனத்தின் பங்குகளை தனியா ருக்கு தாரைவார்க்கும் முடி வெடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசு எல்அய்சி பங்குகளை சந் தைப்படுத்தலில் பட்டியலிட்டது. முதல் நாளிலேயே அதன் பங்கு மதிப்பில் பெருமளவிலான சரிவை சந்தித்தது.

பங்குச்சந்தையில்  எல்அய் சியின் மதிப்பு கடந்த வாரத்தின் 4 வர்த்தக நாட்களில் (மே 17 முதல் 20 வரை)  மட்டும் அதன் சந்தை மதிப்பில் 77 ஆயிரத்து 600 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்கட்கிழமை யன்றும் (மே 23) எல்அய்சி பங் குகள் சரிவைச் சந்தித்துள்ளதால், சந்தை மதிப்பில் மேலும் பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயத்திற்கு எல்அய்சி நிறு வனத்தை மோடி அரசு தள்ளியிருக்கிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவ னமான எல்அய்சி-யை தனியார் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக அதன் 3.5 சதவிகிதப் பங்குகளை ஆரம்பப் பொதுச்சலுகை அடிப் படையில் மோடி அரசு விற்றது. 

பங்கு ஒன்றின் விலை  அதிகபட்சமாக 949 ரூபாய் என்ற அடிப்படையில், மொத்தம் 22 கோடியே 30 லட்சம் பங்குகள் விற்கப்பட்டன. இதன்மூலம் 20 ஆயிரத்து 557 கோடி மோடி அரசுக்கு கிடைத்தது.

தனியாருக்கு விற்கப்பட்ட இந்த பங்குகள் கடந்த மே 17 அன்று முதன்முறையாக பங்குச்  சந்தையில் பட்டியலிடப்பட்டன.  முதலீட்டாளர்கள் வாங்கிய 949 ரூபாய் என்ற விலையைக் காட்டிலும் சுமார் 65 ரூபாய் தள்ளுபடி விலையில் சுமார் 867 ரூபாய் 20 காசுகள் என்ற குறைந்த விலைக்கே எல்அய்சி பங்குகள் பட்டியலிடப்பட்டது. வாங்கிய விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு  போனதால், எல்அய்சி சில்லரை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

அதுமட்டுமல்ல, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே எல்அய்சி-யின் சந்தை மதிப்பு 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய்  அளவிற்கு சரிந்தது. 

எல்அய்சி-யின் 100 சதவிகித  பங்குகளின் சந்தை மதிப்பு முன்பு ரூ. 6 லட்சம்  கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது கடந்த மே 17 அன்று ஒரேநாளில் ரூ. 5 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக சரிந்தது. 

எல்அய்சி நிறுவனத்தின் உண் மையான உட்பொதிக்கப்பட்ட மதிப்பு ரூ. 13 லட்சம் கோடிக்கும் அதிகம். அதை ரூ. 6 லட்சம் கோடி என்று  மோடி அரசு சரிபாதியாக குறைத்து மதிப்பிட்டது. இந்த மதிப்புக்குறைப்பே ஒரு மோசடி என்று குற்றச்சாட்டுகள் எழுந் தன. 

எல்அய்சி நிறுவனத்தின் சொத்து மதிப்பைக் குறைத்து, அவற்றை கார்ப்பரேட் பெருமுத லாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கும் சதி பின்னணியில் இருப்பதாக எல்அய்சி ஊழியர் சங்கங்கள் எச்சரித்தன.

பங்குச்சந்தையில் 5-ஆவது பெரிய நிறுவனம் என்ற பெய ரையும் எல்அய்சி இழந்துள்ளது.  

இதனிடையே, இந்த வார வர்த் தகத்தின் முதல் நாளான திங்கட் கிழமையன்று (மே 23) எல்அய்சி பங்குகள் 1.37 சதவிகிதம் சரி வையே கண்டன. பங்கு ஒன்றின் விலை 814 ரூபாய் 80 காசுகள் என்ற அளவிற்கு வீழ்ச்சியில் இருந் தது. எல்அய்சி பங்குகள் விலை இதுவரை பட்டிய லிடப் பட்ட விலையைக் காட்டிலும் 11.35 சதவிகிதம் அளவிற்கு சரிவிலேயே  உள் ளது.


No comments:

Post a Comment