கோபி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

கோபி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

 குற்றால பெரியாரியல் பயிற்சி முகாம், பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா மாநாடு, 

மாநில மகளிரணி - மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் பெருமளவில் தோழர்கள் கலந்து கொள்ள முடிவு

கோபி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானங்கள்

கோபி, மே 17 கடந்த 15.05.2022 அன்று மாலை 6 மணியளவில் கோபிசெட்டிபாளையம் மாவட்ட  கழக காப்பாளர் இரா.சீனி வாசன் தலைமையில் கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்.ந.சிவலிங்கம் முன்னிலை ஏற்று உரையாற்றினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1) குற்றாலத்தில் எதிர்வரும் ஜூன் 8,9,10,11 ஆகிய தேதி களில் வரலாற்று சிறப்பிக்க வகையில் நடைபெறவுள்ள பெரியாரியில் பயிற்சி பட்டறைக்கு பெருமளவில் மாவட்ட கழகத்தின் சார்பில் மாணவர்களை, இளைஞர்களை அனுப்பி வைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

2) எதிர்வரும் ஜூன் 19 ஆம் தேதி செஞ்சியில் நடை பெறும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொன் விழா மாநாட்டில் மாவட்ட கழகத்தின் சார்பில் திரளாக கலந்து கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.

3) எதிர்வரும் ஜூலை 17 ஆம் தேதியன்று அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டில் மாவட்ட கழகத்தின் சார்பில் அதிக அளவில் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.

4) தந்தை பெரியார் சமூக காப்பணி - பயிற்சிக்கு மாணவர்களை, இளைஞர்களை அனுப்பி வைப்பதென தீர்மானிக்கப்படுகிறது.

5) எதிர்வரும் ஜூன் 6 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள மாநில மகளிரணி- மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்திற்கு மகளிர் அமைப்புகளின் பொறுப்பாளர்களை, தோழர்களை பெருமளவில் கலந்து கொள்ள செய்வதென தீர்மானிக்கப்படுகிறது.

6) புதியதாக கழகத்தில் இணையும் தோழர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை உறுப்பினர் அட்டை கொடுக்க வேண்டுமென தலைமைக் கழகத்தைக் கேட்டுகொள்ளப் படுகிறது.

7)அரியலூரில் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி மாநாட்டில் கணிசமான அளவில் விடுதலை சந்தா கொடுப்ப தென தீர்மானிக்கப்படுகிறது.

8) எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் 'பெரியார் ஆயிரம்' வினா-விடை போட்டியில் பெருமளவில் மாணவர் களை கலந்து கொள்ளச் செய்வதென தீர்மானிக்கப்படுகிறது.

9) மாதம் குறைந்தபட்சம் ஒரு கிளைக் கழகம் துவக் குவதென தீர்மானிக்கப்படுகிறது .

10) எதிர்வரும் ஜூலை மாதத்தில் கழக மாவட்டத்தில் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களை அழைத்து சிறப்பாக பொதுக் கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப் படுகிறது. 

கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் குப்புசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி வெள் ளியங்கிரி, காமதேனு கலை அறிவியல் கல்லூரி அமைப்பாளர் சி.மதிவதனி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் க‌.திவ்யா, பெரியார் புத்தக நிலையம்சீனு.மதிவாணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் ப.வெற்றிவேல் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment