ஏட்டு திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து...

13.5.2022
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

  நாட்டின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் நீதி பதிகள் நியமிக்கப்படும்போதுதான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங் களும், உணர்வுகளும் பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தி ஹிந்து:

சமையல் எரிவாயு உருளை விலையேற்றம் காரணமாக, கடந்த நிதியாண்டில்,  மோடி அரசின் முதன்மை நலத்திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா வின் 90 லட்சம் பயனாளிகள் தங்கள் சிலிண்டர்களை நிரப்பவில்லை. மேலும் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் தங்கள் எரிவாயு உருளைகளை ஒரு முறை மட்டுமே நிரப்பியுள்ளனர்.

தி டெலிகிராப்:

சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்கள் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ரிசர்வ் வங்கியின் உயர் சகிப்புத்தன்மை அளவான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

 பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி நேரடியான மோதலே தவிர, போட்டி வகுப்புவாதமல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

 ஆங்கிலம் தடைகளை உடைக்க உதவுகிறது என இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து.

- குடந்தை கருணா

 

No comments:

Post a Comment