இந்துத்துவவாதிகளின் அச்சுறுத்தல்! பத்திரிகை சுதந்திரத்தில் மோசமான இடத்துக்குத் தள்ளப்பட்ட இந்தியா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

இந்துத்துவவாதிகளின் அச்சுறுத்தல்! பத்திரிகை சுதந்திரத்தில் மோசமான இடத்துக்குத் தள்ளப்பட்ட இந்தியா!

புதுடில்லி, மே 7 - பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடு களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மிகமோச மான இடத்தில் இருப்பதாக ‘எல்லைகளற்ற செய்தி யாளர்கள்’  (Reporters Without Borders - RSF) அமைப்பின் ஆய்வ றிக்கை கூறியுள்ளது.

2022-ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசைப் பட்டியலை ‘எல்லை களற்ற செய்தியாளர்கள்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தி யா மிகமோசமான வகையில் 150 ஆவது இடத்திற்கு போயிருக்கிறது. 

ஆண்டுதோறும், பன்னாட்டு பத்திரிகையாளர் தினமான மே 3 ஆம் தேதியன்று, ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதை ‘எல்லைகளற்ற செய்தியாளர் கள்’ அமைப்பு வழக்கமாக கொண்டுள் ளது.  கடந்த ஆண்டுகூட இந்தப் பட்டியலில் இந்தியா  142ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், ஒரே ஆண்டில் 8 இடங்கள் கீழிறங் கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இதே பட்டியலில் இந்தியா 133 ஆவது இடத்தில் இருந்தது. அதன் படி பார்த்தால், கடந்த 5 ஆண்டுக ளில் 17 இடங்கள் கீழிறங் கியுள்ளது. 

பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் முதலிடத்தில் நார் வே-யும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. சுவீடன், எஸ்டோனியா, பின்லாந்து ஆகி யவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வல்லரசு நாடுகளான பிரிட்டன் 24ஆவது இடத்திலும் பிரான்ஸ் 26ஆவது இடத்திலும் அமெரிக்கா 42ஆவது இடத்திலும் உள்ளன.   இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் கூட இந்த தர வரிசைப் பட்டியலில் 30 இடங்கள் முன்னேறி 76ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

இலங்கை 146ஆவது இடத் திலும், பாகிஸ்தான் 157ஆவது இடத்திலும், வங்கதேசம் 162 ஆவது இடத்திலும், மியான்மா 176ஆவது இடத்திலும் உள்ளன.  ரஷ்யா 155ஆவது இடத்திலும், சீனா 175ஆவது இடத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பத்திரிகை சுதந் திரம் இந்த நாடுகளை விடவும் மோசமான நிலைக்குப் போனதற்கு, இந்து தேசியவாத அடிப்படையிலான வன்முறைகள் கட்டுக்கடங் காமல் அதிகரித்து வருவதே காரணம் என்று ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. “இந்து தேசியவாதி களால் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின் றனர்.  இந்திய அரசு மீது விமர் சனங்களை முன்வைக்கும் பத்திரி கையாளர்கள், சமூக வலைதளங் களிலும் நேரடியாகவும் இழிவு படுத்தி மிரட்டப்படுகின்றனர்” என்று அந்த அமைப்பு தனது ஆய் வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

No comments:

Post a Comment