இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு பிரதமர் ஆதரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு பிரதமர் ஆதரவு

கொழும்பு, மே 16 இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி போராட்டம் நடத்துபவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி யில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ஆம் தேதி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குத லுக்கு பதிலடியாக கலவரம் வெடித்தது.

கடந்த 12-ஆம் தேதி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சி களுக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன.

அதே சமயத்தில், ராஜபக் சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி, ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஆதரவு தெரிவித் தது. நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சி களும் இடைக்கால அரசில் இடம் பெறாவிட்டாலும், இலங் கையை மீட்பதற்கான விக்ரம சிங்கேவின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதி அளித்தன.

போராட்டம் நீடிக்க வேண்டும்

இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9-ஆம் தேதியில் இருந்து காலிமுக திடலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர் களுக்கு பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, யாரும் எதிர்பாராத வகையில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:-

இலங்கை அரசியல் முறையில் மாற்றத்தை கொண்டுவர இந்த போராட்டம் நீடிக்க வேண்டும். நாட்டை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை அந்த இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்.

அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். நாட்டின் எதிர் கால கொள்கையை வடிவமைப்பதில் அவர்களின் கருத்துகள் கேட்கப்படும். அவர்களது நலன்களை ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை நான் அமைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு கோத்தபய அழைப்பு

இதற்கிடையே, புத்தர் பிறந்த நாளான புத்த பூர்ணிமா, ‘வேசக் போயா’ தினமாக நேற்று (15.5.2022) கொண்டாடப்பட் டது. இதையொட்டி, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போதைய சூழ்நிலையை நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். கடின மான சூழ்நிலையில், நெகிழ்வுத் தன்மையுடன் இயங்குவது அவசியம். நாடு சிக்கலான நிலைமையில் இருக்கும்போது, இதற்கு தீர்வு காண அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உடன டியாக இணைந்து செயல்பட வேண்டும். முதன்மையான இலக்கை விட்டு விலகாமல், நாம் விரும்பிய நோக்கத்தை எட்டுவதே நமது உண்மையான இலக்காக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

நிலைத்ததன்மை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘சுயகட்டுப்பாடும், நிலைத்ததன்மையும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கையை மீட்டு கொண்டுவர உறுதி எடுத்துக் கொள்வது புத்தருக்கு செய்யும் தொண்டு’’ என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இந்திய தூதரகம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment