சமஸ்கிருத மொழிக்கு கோடி கோடியாக கொட்டும் ஒன்றிய அரசு கனிமொழி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 25, 2022

சமஸ்கிருத மொழிக்கு கோடி கோடியாக கொட்டும் ஒன்றிய அரசு கனிமொழி சாடல்

 சென்னை,மே 25- ஒன்றிய பாஜக அரசு சமஸ்கிருதம் மொழிக்காக கோடி கோடியாய் செலவு செய்கிறார்கள், ஆனால் அதை பேச ஆள் இல்லை' என திமுக மக்களவைக் குழு துணைத்தலைவர் கனிமொழி குறிப்பிட் டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும், திமுக மகளிரணி மாநில செயலாளருமான கனிமொழி பங்கேற்று உரையாற்றுகையில்,

இங்குள்ளவர்கள் எங்கள் உரிமை, எங்கள் குரல் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று. தமிழ் இனம் என்பதுதான் நம் அனைவரையும் இணைத்து வைத்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இதை விட பெரிய எதிரியை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழர்களின் தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது. ஒன்றிய அரசு சமஸ்கிருதம் மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறது. ஆனால் அதை பேச ஆள் இல்லை. கோயிலில் வேண்டுமென்றால் பூஜைகள் செய்யலாம், ஆனால் பேச ஆயிரம் பேருக்கு மேல் ஆளில்லை. தொன்மையும் தொடர்ச்சியும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி.  -இவ்வாறு கனிமொழி பேசினார்.

இந்தியாவில் முதலீடு: சிங்கப்பூர் முதலிடம்!

புதுடில்லி,மே 25- 2021-22 நிதியாண்டில், இந்தியா 8 ஆயிரத்து 357 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018 பிப்ரவரி முதல் 2020 பிப்ரவரி வரையில் அந்நிய நேரடி முதலீடு 14 ஆயிரத்து 110 கோடி டாலராக இருந்தது. 2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரையிலான காலத்தில் அது 17 ஆயிரத்து 184 கோடி டாலராக உயர்ந் துள்ளது. சென்ற நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா வுக்குள் வந்த மொத்த முதலீட்டில் சிங்கப்பூரின் பங்கு 27 சதவிகிதம் ஆகும். இரண்டாம் இடத் தில் அமெரிக்காவும் (18 சதவிகிதம்). மூன்றாம் இடத்தில் மொரிஷியஸூம் (16 சதவிகிதம்) உள்ளன.

காற்றாலை மின் உற்பத்தி

பன்னாட்டளவில் முன்னிலையில் தமிழ்நாடு

புதுடில்லி, மே 25- காற்றாலை மின் உற்பத்தியில், தமிழ்நாடு மாநிலம் உலக நாடுகளுடன் போட்டி போடுவதாக, உலக பொருளாதார மன்ற(World Economic Forum)  அறிக்கை குறிப்பிட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் (342 ஜிகாவாட்) உள்ளது. அமெரிக்கா இரண்டா மிடத்தில் (139 ஜிகா வாட்) உள்ளது. ஜெர்மனி மூன்றாவது இடத்தில் (60 ஜிகா வாட்) இருக்கிறது. 42 ஜிகா வாட் மின்னுற்பத்தியுடன் இந்தியா 4-ஆம் இடம் வகிக்கிறது. இதில், அதிகபட்ச காற்றாலை மின்சாரம் தமிழ்நாடு மூலமே கிடைக்கிறது. ஆஸ்திரேலியா, மெக்சிகோ நாடுகளைக் காட்டிலும் அதிகமான காற்றாலை மின்சாரம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது என்று உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment