ஏட்டுத்திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

ஏட்டுத்திக்குகளிலிருந்து...

 14.5.2022

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

தொழில் அதிபர் அதானிக்கு மாநிலங்களவை உறுப் பினர் பதவிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனி டம் அமித் ஷா பரிந்துரை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் கூறினர். ஆனால், வேலை கிடைக்கிறதா? என்பதுதான் கேள்வி. ஹிந்தி படித்தவர்கள் இங்கு பானி பூரிதான் விற்பனை செய்கின்றனர் என கோவை பாரதியார் பல் கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசினார்.

தமிழ் நாட்டில் மயிலாடும்பாறையில் 4200 ஆண்டு களுக்கு முன்னர் பயன்படுத்திய இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

தமிழ்நாட்டில் தனி நிர்வாகப் பணியை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், துணை ஆட்சியர் மட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுத் துறை களைச் சேர்ந்த அனைத்துத் தகுதியான அதிகாரிகளும் இப்போது இந்திய நிர்வாகப் பணி தகுதியினைப் பெற வாய்ப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment