பிஜேபி ஆளும் கருநாடகத்தில் மதமாற்ற தடை சட்டமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

பிஜேபி ஆளும் கருநாடகத்தில் மதமாற்ற தடை சட்டமாம்

பெங்களூரு, மே 13  பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத்தை தடுக் கும் வகையில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி கருநாடக மாநிலத்திலும் மதமாற்ற தடைச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிறப்பாணை பிறப்பிப்பது தொடர்பாக அங்கு முதலமைச்சர் பசவ ராஜ் பொம்மை  தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில்  நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.   இக்கூட்டத்தில் மதமாற்ற தடைச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் நிலையில் சிறப்பாணை பிறப்பிப்பது தொடர்பாக விவாதித்து அதற்கு அனுமதி பெறப்பட்டதாக அமைச்சர் ஜேசி மாதுசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

அதன்படி,  கருநாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் பலவந்தமா கவோ? இலவச கல்வி, வேலைவாய்ப்பு திருமணம் உள்ளிட்டவை வழங்கப் படும் என ஆசை காண்பிக்கப்பட்டோ மதமாற்றம் செய் யப்பட்டால் சம்பந் தப்பட்ட நபர்களுக்கு 3 ஆண்டு  சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

அப்பாவி பெண்கள், தாழ்த்தப் பட்ட, பழங்குடியின  மக்களை ஏமாற்றி மத மாற்றம் செய்தால் மூன்று முதல் 10 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை சிறைத்தண் டனையும் கிடைக்கும். கூட்டாக மத மாற்றம் செய்யப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அப ராதமும் 10 வருடம் சிறைத்தண்டனையும் கிடைக்கும்.

முன்னதாக கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் கருநாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் அம்மாநில சட்டசபையில்,  கடந்தாண்டு டிசம்பரில் நடந்த கூட்டத்தொடரில், சட்ட மசோதா தாக்கல்  செய்தபோது, மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  டி.கே.சிவகுமார், சட்டசபையில் மசோதா நகலை கிழித்தெறிந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment